தெரிந்தும் தீக்குள் விரல் வைப்பது ஏனோ...? posted byM.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.)[06 May 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27255
கட்டுரையாளர் சுடு மணலின் சோகத்தையும், ஆட்டுமந்தையின் அவலத்தையும் சொல்ல முனைந்துள்ளார். சந்தடி சாக்கில் சவூதியை சாடியிருப்பது அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றது.
அதே சமயம் நம்மவர்கள் ஆயிரம் காரணங்களைக் கூறிக் கொண்டு ஐயாயிரம் கனவுகளோடு சவூதிக்குச் சென்று சொற்ப சம்பளம் கிடைத்தால் போதும் என நெருப்பைத் தொட்டால் சுடும் எனத் தெரிந்தும் அதை தொட்டுப் பார்த்து கையை சுட்டுக் கொள்வது தான் வேதனையாக உள்ளது.
சொந்த நாட்டில் ஒரு டீ கடையில் கிளாஸ் கழுவியாவது தம் வாழ்க்கையை நடத்திச் செல்வேன் என தன்நம்பிக்கையுடன் எத்தனை பேர்கள் உள் நாட்டில் தொழில் செய்து வருகின்றனர்? அப்படியே செய்ய முன் வந்தாலும் மனைவிமார்கள் தம் சுய லாபத்திற்காகவும் வறட்டு கவுரவத்திற்காகவும் மாப்பிள்ளை வெளிநாட்டில் வேலை பார்த்தால் தான் சிறப்பு என எண்ணும் கேவலமான சிந்தனையில் சிக்குண்டு பாலைவனத்தை நோக்கி பறந்து செல்லும் பாசப்பறவைகள் ஏராளம்.
இந்த பரிதாபத்திற்குரியவர்கள் அயல்நாட்டில் தன் இரத்தத்தை வியர்வையாக்கி நொந்து நூலாகி தம் இளமையையையும் வலிமையையும் பாழாக்கி வாழ்நாள் கைதியைப் போல அயல்நாட்டு மண்ணில் அடிமை வாழ்க்கை வாழந்து வரும் ஆயிரக்கணக்கானோரை நம்மால் அடையாளம் காட்ட முடியும். இவர்களை நாம் பேட்டி கண்டால் அவர்களின் அலறல்கள் நம் நெஞ்சைப் பிழியத்தான் செய்யும்.
காலமெல்லாம் நினைவுகளின் நிழல் வாழ்க்கையை மட்டும் வாழ்ந்து வரும் இவர்களின் மனைவிமார்கள் என்ன மரக்கட்டைகளா? உணர்ச்சியும், புணர்ச்சியும் மிருகங்களுக்கே உள்ள போது மனிதர்கள் என்ன இதற்கு விதி விலக்கா? மாதந்தோறும் வங்கிக்குச் சென்று பணம் எடுத்து பிள்ளைகளின் படிப்புச் செலவிற்கும் குடும்ப பராமறிப்பிற்கும் தம் கணவனின் உழைப்பை நம்பி இருக்கும் இந்த அபலைகள் மேற் குறிப்பிட்ட உணர்ச்சிகளுக்கும் புணர்ச்சிகளுக்கும் விதி விலக்கானோர் தான்! ஓரிரு பிள்ளைகளைப் பெற்று விட்டாலே வாழ்க்கை இவ்வளவுதான் என தனக்குத் தானே ஓர் குறுகிய வட்டத்தைப் போட்டுக் கொண்டு அந்த குண்டுச் சட்டிக்குள் வாழ்க்கை எனும் குதிரையை படாத பாடு பட்டு ஓட்டிக் கொண்டிருப்பது வேதனைக்குரியதே!
ஏன் இந்த அவலம்? எதற்கு இந்த வினோத விரதம்? உள்ளூரில் ஆகுமாக்கப்பட்ட ஹலாலான எந்தத் தொழிலையும் அது சொற்ப வருமானத்தையே தந்த போதிலும் அதை செய்து குடும்பத்தை ஓட்டுவேன் என மன உறுதியோடு உழைக்க நம் இளைஞர்கள் முன் வந்தால் சுடு மணலின் சோகக் கதைகள் இனி கட்டுரையாக வெளி வர வேண்டிய அவசியமிருக்காது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross