Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:06:31 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 86
#KOTWEM86
Increase Font Size Decrease Font Size
திங்கள், மே 6, 2013
ஆடு வாழ்க்கை! (பாகம் 1)

இந்த பக்கம் 3901 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

21/12/1996
கமீஷ் மிஷ்யத், ஸவூதி

அஸ்ஸலாமு அலைக்கும் ! தேவரீர். வாப்பா அவர்களின் சமூகத்திற்கு !!

உங்கள் அன்பு மகன் மொகுதூம் எழுதிக் கொள்வது,
40 ஆடுகள் , 1 கழுதை இவற்றுடன் நான் இங்கு சுகம்.
தாங்களும் உம்மாவும் தம்பி தங்கைமார்களும் அங்கு சுகமாக இருப்பீர்கள்...


தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணையை சார்ந்த ஒரு சகோதரர் ஸவூதியிலிருந்து தன் வீட்டிற்கு எழுதிய கடிதம் அது. அரபு நாடு என்ற பாலை பூமியில் தனது கனவுகளுக்கும் நினைவுகளுக்கும் ஆசைகளுக்கும் எதிர் பார்ப்புகளுக்கும் அவர் கொடுத்த விலைகளின் பட்டியல்தான் அது.

சொந்த நாட்டில் பசுமையான ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காக அன்னிய பூமியில் வாழ்க்கையை களவு கொடுத்தவர்களின் கதைகள் ஏராளம்.

கடல் கடந்து பணி புரியும் மனிதர்களின் பளபளக்கும் வாழ்க்கை பக்கங்களை மட்டும் அறிந்த அவர்களின் குடும்பத்தினருக்கு இருண்ட இன்னொரு பக்கம் தெரிவதே இல்லை.

வாழ்வை களவு கொடுத்த மனிதர்கள் தங்களின் துயரத்தை தானாக சொல்வதுமில்லை. அவர்களின் குடும்பத்தினரும் அதை அறிய முயற்சிப்பதுமில்லை.

ஆனால் கலை இலக்கிய வடிவங்களில் அந்த முயற்சி நடந்திருக்கின்றது.

“”” கப்பலுக்கு போன மச்சான்
கண்ணிறஞ்ச ஆச மச்சான்
எப்பத்தான் வருவீங்கன்னு எதிர்பார்க்கின்றேன்
நான் இரவும் பகலும் தொழுது தொழுது கேட்கிறேன்.
கண்ணுக்குள்ள வாழ்பவளே
கல்புக்குள்ள ஆள்பவளே ..............
....... உன்னை விட்டு வந்து உள் மனசு வாடுதடி
உள்ளபடி சொன்னாக்கா உயிர் அங்கே வாடுதடீ...... “”


பிரிவின் துயர் வழியும் வரிகள்.

நமது ஊரின் இசைக் குயிலான மறைந்த ஏ.ஆர். ஷேக் முஹம்மது அவர்களின் தேர்ந்த குரலில் அந்த ஏக்கம் சற்றும் குறையாது நம்மை வந்தடைகின்றது. வெளியே யாரோடும் பகிர்ந்து கொள்ள முடியாத மனக் குமைச்சலானது குன்று போல் குவிந்து கிடப்பதை உணர முடிகின்றது. வாழ்க்கை எனும் மாளிகையை எழுப்புவதற்காக பிறந்த மண் துறந்து வெளி நாடு செல்வது குறிப்பாக வளை குடா நாடுகளுக்கு செல்லும் துயர வாழ்க்கை என்பது நமதூருக்கு மட்டும் சொந்தமில்லை. நமது அண்டை மாநிலமான கேரளத்திற்கும் இது பொருந்தும்.

மண் துறந்த உறவுகளின் துயரமானது ஏராளமான பாடல்களின் வழியாக மலையாள தேசத்தில் பதியப்பட்டுள்ளது. துபை கத்து ( துபை கடிதம் ) பாட்டுகளில்

http://www.youtube.com/watch?v=44UDKYKKUbA

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vBt3drFzgoY

இந்த துயரம் நிறைந்து கிடப்பதை காணலாம்.


நன்றி : தோழர். அ. மாக்ஸ்

நாடு கடந்து சென்றவர்களின் துயரம் தொடர்பான ஒரு புதினத்தை ( நாவல் ) அண்மையில் வாசிக்க நேர்ந்தது. வெளி நாட்டு வாழ்க்கையின் துயரத்தை அறிய விரும்புபவர்கள் வாசிக்க வேண்டிய புதினம் இது.

அந்த புதினத்தின் பெயர் ஆடு ஜீவிதம். இந்த நூலை எழுதியவர் கேரளத்தைச்சார்ந்த பென்னி டானியல் என்ற பென்யாமீன். இதற்கு கேரள சாஹித்ய அகாடமியின் விருதும் கிடைத்துள்ளது. இது மலையாளத்திலிருந்து ஆங்கிலத்தில் Goat days என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நூலை தமிழில் ஆடு ஜீவிதம் என்ற பெயரிலேயே சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார் ராமன் அவர்கள்.

சென்னையில் இயங்கும் உயிர்மை பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. ( விலை ரூ 140/=. தொலை பேசி : 044 2499 3448 ).

இதுதான் கதைச்சுருக்கம் :

தனக்கான சிறிய வீடு ஒன்றை கட்ட வேண்டும். தனது வீட்டாரின் சிறியதும் பெரியதுமான ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ஸவூதிக்கு செல்கின்றார் நஜீப்.

ஸவூதிக்கு அனுப்பிய பயண முகவர் வாக்களித்த வேலைக்கு மாற்றமாக ஒரு ஆட்டுப்பண்ணையில் போய் யதேச்சையாக சிக்கிக்கொள்கின்றார் . ஆட்டுப்பண்ணை முதலாளி மிக கொடூர மனம் படைத்த ஒரு காட்டரபி. எந்த அடிப்படை மனித நாகரீகமும் அறியாத ஒரு பிறவி. சுட்டுப் பொசுக்கும் பாலைவனத்தில்தான் அந்த ஆட்டு பண்ணை அமைந்திருக்கின்றது .தனது பண்ணையில் உள்ள ஆடுகளை விட கேவலமாகவும் இழிவாகவும் இரக்கமின்றியும் நஜீபை நடத்துகின்றார்.

அங்கிருந்து தப்பிச்செல்ல எந்த வழியும் இல்லை.

ஒரு வழியாக அறிமுகமான ஓரிரு மனித உயிர்களின் துணையுடன் அதீத வெப்பமுடைய வெண் மணற் கடலில் தனது உயிரை இழுத்து பிடித்து காப்பாற்றியபடி தப்புகின்றார் நஜீப்.

பின்னர் காவல்துறையிடம் தஞ்சம் புகுந்து சிறைக்கு செல்கின்றார். அங்கு சென்றாலும் கூட நிம்மதியில்லை .அங்கும் வந்து தொழிலாளிகளை மீட்டிச்செல்வதற்கு முதலாளிகளுக்கு ஸவூதி சட்டம் வழி வகுக்கின்றது.

அப்படிப் பலர் துடிக்க பதைக்க நஜிபின் கண் முன்னே இழுத்தும் செல்லப்படுகின்றனர். அந்த அவலம் மீண்டும் ஒரு பாலை வனத்துயரை அவருக்குள் நிகழ்த்துகின்றது.

மனிதன் வாழும் இந்த பூமியில் அவனது உணர்வுகளையும் உள்ளத்தையும் உடலையும் தகர்த்தெறியும் முழு வல்லமை பாலைவனத்திற்கும் சிறைக்கும் உண்டு.

ஸவுதீய சட்டங்களின் பாரபட்சமானது பாலைவனம் , சிறையின் கொடூரங்களை அதி கொடூரம் மிக்கதாக மாற்றுகின்றது . எக்கு தப்பாக அங்கு மாட்டும் மனிதனுக்கு இறந்து போவது ஒன்று மட்டுமே விடுதலைக்குண்டான ஒரே வழியாக தெரிவதில் எந்த அதிசயமுமில்லை. வாழ்வின் மூச்சுப் பாதையை இழுத்துப் அடைக்கும் பாலை மனிதர்களின் பூமியில் இறைவன் மீதுள்ள நம்பிக்கை என்ற ஒற்றை பற்றுக்கோட்டின் துணை கொண்டு பாலைவனத்திலிருந்தும் சிறையிலிருந்தும் பாரபட்சமான சட்டங்களிலிருந்தும் தாயகம் மீளுகின்றார் நஜீப்.

வாழ்க்கையின் முற்றுப்புள்ளிகளால் மட்டுமே நிறைந்திருப்பதாக கருதப்படும் பாலைவனத்திலும் சிறையிலும் வாழ்க்கையின் மிக மெல்லிய சரடு இழையோடுவதையும் , அழகியலோடு அந்த வாழ்க்கை துள்ளு நடை பயில்வதையும் நஜீபின் மனம் கண்டு பிடிக்கத்தவறவில்லை. ஆதிக்கம் நிறைந்த மனித மனங்களை விட பாலைவனம் ஒன்றும் கொடுமையானது இல்லை . மழைத்துளி பட்டவுடன் தழைக்கும் செடி கொடிகளின் சிறகு விரிக்கும் புள்ளினங்களின் அங்கு வாழும் சிற்றுயிர்களின் கிசு கிசுப்பிலிருந்து இதை அறிகின்றார் நஜீப்.

நூலின் பெரும்பகுதி ஆடுகளோடும் , பாலை வனத்தோடும் , பாலை வன உயிரிகளோடும் கழிகின்றது. அந்த வாழ்வை நூல் வர்ணித்து செல்கையில் நம்பிக்கை , அவ நம்பிக்கை என்ற இரு கோட்பாடுகளின் எல்லைக்கோடுகளை மாறி மாறி தொட்டுச் செல்கின்றது.

வாழ்வின் எல்லா நம்பிக்கைகளும் செயலற்றுப்போவதாக மனித மனதின் பெரும் பகுதி உணரும் கணங்களில் , அவனது இன்னொரு பகுதி மனதானது அந்த எதிர் மறை உணர்வுகளோடு நடத்தும் போராட்டம்தான் இந்த புதினத்தின் மையக்களம்.

வாசகர்களின் பார்வைக்காக அந்த புதினத்திலிருந்து சில வரிகள் :

“” அந்த பாலைவனத்தின் சின்னஞ்சிறு செடிகள் எனக்கு வாழ்க்கையின் நம்பிக்கை பாடங்களை மிக ரகசியமாக என் காதில் கிசு கிசுத்தன. நஜீப் ! இந்த பாலைவனத்தின் வளர்ப்பு மகனே , எங்களைப்போல நீயும் உன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இந்த பாலை வனத்துடன் போராடு. தீக்காற்றும் ,வெயில் நாளங்களும் உன்னைக் கடந்து போகும்.

அவற்றிடம் நீ தோற்று விடாதே : போராடி சோர்ந்து விடாதே , அவை உனது உயிரையே விலையாக கேட்கும். விட்டுக் கொடுத்து விடாதே. இறந்தவனைப்போல தியானத்தில் ஆழ்ந்து விடு. முட்டாளைப்போல நடி. மறுபடியும் நீ வீறு கொண்டு எழவே மாட்டாய் என நம்ப வை. கருணை நிறைந்த அல்லாஹ்வை மட்டும் ரகசியமாகக் கூப்பிடு.அவன் உன்னுடைய துயரத்தை அறிவான். அவனுக்கு உனது பரிதாபக் குரல் நிச்சயம் கேட்கும். நஜீபே ... ! முடிவில் உனக்காக ஒரு காலம் கனியும். காலத்தின் இளம் காற்று உன்னை இந்த பூமிக்கடியிலிருந்து கைப்பிடித்து வெளியே கொண்டு வரும்.. “” ( நூல் பக்கம் : 137 )


“ நம்பிக்கையற்றவர்களே ... பரம காருண்யனான அல்லா நல்கிய அழகிய பசுஞ்சோலையில் மெய் மறந்து வாழும் பாக்கியம் பெற்றவர்களே .... உங்களைப்பொறுத்த வரை பிரார்த்தனைகள் வெறும் பிரசங்கங்களாகவும் , சடங்குகளுமாக இருக்கலாம். ஆனால் எனக்கோ அதுதான் என் வாழ்க்கையின் கடைசி அச்சாணி.

உடலளவில் உருக்குலைந்து சல்லடையாகிப்போனாலும் என் ஆத்மா உறுதி பெற்றிருந்தது இந்த நம்பிக்கையின் மீதுதான் . அது மட்டும் இல்லையென்றால் அந்த நெருப்பில் நானொரு நாணல் புல் போல எரிந்து சாம்பலாகிப்போயிருப்பேன்.” ( நூல் பக்கம் : 145 ).


ஸவூதி மண்ணில் மார்க்க சட்டங்கள் இறுக்கமாக பின்பற்றப்படுவதாக மார் தட்டப்படுவதுண்டு . ஆனால் இந்தியா , பங்களா தேஷ் , இலங்கை ,நேபாள் , வியட்னாம் போன்ற மூன்றாம் உலகை சார்ந்த ஏழைத் தொழிலாளிகளிடம் அரபி முதலாளிகள் பொதுவாக இரக்கம் காட்டுவதில்லை. இதில் சில விதி விலக்குகள் இருக்கலாம். ஆனால் அந்த நாட்டு சட்டங்கள் அரபுகளுக்கு ஒரு விதமாகவும் அஜ்னபிகளுக்கு { அன்னியர்கள் } ஒரு விதமாகவும்தான் செயல்படுகின்றன.

ஏன் இந்த பாரபட்சம் ? என ஸவூதிய முதலாளியிடம் என் நண்பர் ஒருவர் கேட்டிருக்கின்றார். உங்களை யார் எங்கள் நாட்டிற்கு வேலைக்கு வரச் சொன்னது ? என அவர் திருப்பிக் கேட்டாராம்.

[ இன்ஷா அல்லாஹ் தொடரும் ... ]

{குறிப்பு : துபாய் கத்து பாடல் கோவையின் இணைப்பை அனுப்பி உதவிய இனிய எழுத்தாள நண்பர் ஷாஜிக்கு நன்றிகள் }

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: Raiz (Sydney) on 06 May 2013
IP: 156.*.*.* Australia | Comment Reference Number: 27248

வாசிக்கும் போதே நெஞ்சம் அடைக்கின்றது! ஊமையின் மன வலியும் இவர்களின் வலியும் ஒன்று! இவர்கள் தம் வாழ்கையின் பெரும் பகுதியை பிறருக்காக தியாகம் செய்து, தங்கள் வலியை மறைத்து, மற்றவரின் சந்தோஷத்தில் சிரித்து................மனம் மேலும் அடைக்கிறது!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: முத்துவாப்பா.... (al khobar) on 06 May 2013
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27254

ஆடு வாழ்க்கை ...!!

கடந்த மாதாம் இங்கு ஆடும் வாழ்க்கையாக இருந்தது (நிலநடுக்கம்)

என்னை பாதித்த சில கவிதைகளை உங்களோடு பரிமாற ஆசை படுகிறேன் .

=============================================

மாதத்திற்கு இத்தனை நாட்கள் என தெரிந்தாலும்
ஒவ்வொரு முறையும் எண்ணிப் பார்க்கும் நான்
விடுமுறையை!!

பணயம் வைத்துவிட்டுதான் வந்திருக்கிறோம்
பந்தங்களை பணத்திற்காக!!

=================================================

வெளிநாட்டு வாழ்க்கை நினைத்து அழுது கொண்டிருக்கும் பொழுது ...

உடனே வந்தது ஒரு நண்பரின் கை;
என் தோள்களைத் தொட்டுச் சொன்னார் அவர்,
ஒரு மாதம் அப்படித்தானே இருக்கும் என்று;

நான் வெகுளியாய் கேட்டேன்;
மாதத்திற்குப் பிறகு
மறந்து விடுமா என்று ?
அவர் சொன்னார்
இல்லை மரத்து விடும்;

போகப் போக்க் கற்றுக்கொண்டேன்;
எல்லோரையும் போல
தலையணைக்குள் கதறும்
சப்தமே இல்லாமல்!

===============================================

புகைப்படத்திலேப்
பார்த்துப் பார்த்துப் பழகிய
என் பிள்ளைகள்;
இப்போதும் பார்கிறார்கள்;
அப்படியே !
தூரத்தில் வைத்து.......

கண்களில் பிரகாசத்தோடு;
கைகளை நீட்டி அழைத்தேன் அவர்களை;உள்ளே இருந்து என் மனைவியின் குரல்;
போகமாட்டார்கள் புது ஆளிடம் ?????

குழந்தையை கில்ல சொல்லி அழும்
ச்த்தத்தை தொலைபேசியில் கேட்கின்றோம்
இங்கு கில்லாமல் நாங்கள் அழும் சத்தம் யாருக்கு கேட்குமோ..!!
===========================================

வழிந்தோடும்
உன் கண்ணீரை
என் கரம் கொண்டு துடைக்கத்தான் ஆசை;
ஆனால்
அனுப்ப முடிந்தது
வெளி நாட்டு கைக்குட்டை மட்டுமே!!!

================================================

மச்சினனுக்கும் விசா வேண்டுமென
விண்ணப்பம் ஒன்றுப் போட்டாய்;
சிரித்துக்கொண்டே அழைத்துக்கொண்டேன்
வளைகுடா வலையில்
இன்னொரு விருந்தாளியா
என்னைப்போல ஏமாளியா!

=======================================

கணிப்பொறியில் மாட்டிய எலிகளாய்
நாங்கள் வளைகுடாவில்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. தெரிந்தும் தீக்குள் விரல் வைப்பது ஏனோ...?
posted by: M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) on 06 May 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27255

கட்டுரையாளர் சுடு மணலின் சோகத்தையும், ஆட்டுமந்தையின் அவலத்தையும் சொல்ல முனைந்துள்ளார். சந்தடி சாக்கில் சவூதியை சாடியிருப்பது அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றது.

அதே சமயம் நம்மவர்கள் ஆயிரம் காரணங்களைக் கூறிக் கொண்டு ஐயாயிரம் கனவுகளோடு சவூதிக்குச் சென்று சொற்ப சம்பளம் கிடைத்தால் போதும் என நெருப்பைத் தொட்டால் சுடும் எனத் தெரிந்தும் அதை தொட்டுப் பார்த்து கையை சுட்டுக் கொள்வது தான் வேதனையாக உள்ளது.

சொந்த நாட்டில் ஒரு டீ கடையில் கிளாஸ் கழுவியாவது தம் வாழ்க்கையை நடத்திச் செல்வேன் என தன்நம்பிக்கையுடன் எத்தனை பேர்கள் உள் நாட்டில் தொழில் செய்து வருகின்றனர்? அப்படியே செய்ய முன் வந்தாலும் மனைவிமார்கள் தம் சுய லாபத்திற்காகவும் வறட்டு கவுரவத்திற்காகவும் மாப்பிள்ளை வெளிநாட்டில் வேலை பார்த்தால் தான் சிறப்பு என எண்ணும் கேவலமான சிந்தனையில் சிக்குண்டு பாலைவனத்தை நோக்கி பறந்து செல்லும் பாசப்பறவைகள் ஏராளம்.

இந்த பரிதாபத்திற்குரியவர்கள் அயல்நாட்டில் தன் இரத்தத்தை வியர்வையாக்கி நொந்து நூலாகி தம் இளமையையையும் வலிமையையும் பாழாக்கி வாழ்நாள் கைதியைப் போல அயல்நாட்டு மண்ணில் அடிமை வாழ்க்கை வாழந்து வரும் ஆயிரக்கணக்கானோரை நம்மால் அடையாளம் காட்ட முடியும். இவர்களை நாம் பேட்டி கண்டால் அவர்களின் அலறல்கள் நம் நெஞ்சைப் பிழியத்தான் செய்யும்.

காலமெல்லாம் நினைவுகளின் நிழல் வாழ்க்கையை மட்டும் வாழ்ந்து வரும் இவர்களின் மனைவிமார்கள் என்ன மரக்கட்டைகளா? உணர்ச்சியும், புணர்ச்சியும் மிருகங்களுக்கே உள்ள போது மனிதர்கள் என்ன இதற்கு விதி விலக்கா? மாதந்தோறும் வங்கிக்குச் சென்று பணம் எடுத்து பிள்ளைகளின் படிப்புச் செலவிற்கும் குடும்ப பராமறிப்பிற்கும் தம் கணவனின் உழைப்பை நம்பி இருக்கும் இந்த அபலைகள் மேற் குறிப்பிட்ட உணர்ச்சிகளுக்கும் புணர்ச்சிகளுக்கும் விதி விலக்கானோர் தான்! ஓரிரு பிள்ளைகளைப் பெற்று விட்டாலே வாழ்க்கை இவ்வளவுதான் என தனக்குத் தானே ஓர் குறுகிய வட்டத்தைப் போட்டுக் கொண்டு அந்த குண்டுச் சட்டிக்குள் வாழ்க்கை எனும் குதிரையை படாத பாடு பட்டு ஓட்டிக் கொண்டிருப்பது வேதனைக்குரியதே!

ஏன் இந்த அவலம்? எதற்கு இந்த வினோத விரதம்? உள்ளூரில் ஆகுமாக்கப்பட்ட ஹலாலான எந்தத் தொழிலையும் அது சொற்ப வருமானத்தையே தந்த போதிலும் அதை செய்து குடும்பத்தை ஓட்டுவேன் என மன உறுதியோடு உழைக்க நம் இளைஞர்கள் முன் வந்தால் சுடு மணலின் சோகக் கதைகள் இனி கட்டுரையாக வெளி வர வேண்டிய அவசியமிருக்காது.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...கொட்டிக் கிடக்குது சவுதியிலே
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 07 May 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27263

ஆசிரியர் அவர்கள் 1980 களுக்குள் சென்றால் இதே போல் ஒரு செய்தி கிடைக்கும்.

கவிஞர் ஏ ஆர் தாஹா அவர்கள் அப்போது ஒரு ஒலி நாடா வெளியிட்டார்கள்.அப்போது குறுந்தகடுகள் இல்லாத காலம். முதல் பகுதி A இங்கிருந்து பம்பாய் சென்று சவூதிக்கு விமானம் ஏறும் வரை நமது மக்கள் சந்திக்கும் சிரமங்கள். பகுதி B சவுதி சென்று இறங்கியதிலிருந்து நமது மக்கள் சந்திக்கும் சவால்கள் பிரச்சினைகள் எல்லாவற்றையும் மிக தெளிவாக அதில் கூறியுள்ளார்கள். யாரிடமாவது இருந்தால் கேட்டு போட்டு பாருங்கள்.

நீங்கள் இப்போது எழுதியுள்ள செய்திகள் எங்களுக்கு புளித்துப் போனவை. ஆனாலும்கூட, நமது நாட்டில் தினசரி நடந்துவரும் பணம் இரட்டிப்பு, பைனான்ஸ், சீட்டு, ஆடு, தேக்கு மரம் ஈமு கோழி போன்ற ஏமாற்று வேலைகளை மக்கள் ஜீரணித்துக் கொண்டு மீண்டும் அதில் முதலீடு செய்து எமாறுவதுபோல், அரபு நாட்டு விசாவுக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களும் ஏமாந்து கொண்டிருப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். அந்த காலத்தில் நமது நாட்டில் இவ்வளவு பெரிய சம்பளங்கள் இல்லை, படிப்புக்கள் இல்லை.அப்போது அதை தவிர வேறு வழி தெரியவில்லை. ஆனால் இப்போதும் அது தொடர்கதையாக இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது.

சமீபத்தில் துபையிலிருந்து ஒரு கடிதம் வந்தது. கற்பனை என்றாலும் எல்லோருக்கும் அது ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும்.

ஒரு இளம் கணவன் கனவுகளுடன் அரபு நாடு செல்கிறான். 3,4 வருடங்கள் வேலை பார்த்து விட்டு லீவில் நாடு திரும்ப ஆசைப் படுகிறான். அவனது ஆசை நாயகி அவனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள். நாம் தனியாக குடியிருக்க ஒரு வீடு கட்டினால் சந்தோஷமாக, மாமன் மாமி மச்சிமார் பிரச்சினை இல்லாமல் ஜாலியா தனி குடித்தனம் நடத்தலாம். எனவே கொஞ்சம் தியாகம் செய்யுங்கள்.பணம் அனுப்புங்கள், வீட்டு வேலை ஆரம்பித்து விட்டேன் கட்டி முடிந்ததும் வரலாம்...

நியாயம்தானே, கணவன் பயணத்தை ஒத்திப் போட்டு, உழைக்கிறான், பணம் அனுப்புகிறான். வீடும் கட்டி முடிந்தது. ஊர் வர ஆசைப் படும்போது மீண்டும் ஒரு கடிதம் அன்பு மனைவியிடமிருந்து. ஒரு கார் வாங்கினால், மாமா மச்சானை எதிர்பார்க்காமல் நாம் இருவரும் அதில் சுற்றுலா சென்று வரலாம், முப்பது நாளும் பௌர்ணமிதான்..ஜாலிதான், கொஞ்சம் ஏற்பாடு பண்ணுங்கள். மனைவியின் ஆசை கணவனுக்கு சரி எனப்படுகிறது. உழைக்கிறான், கார் வாங்கி ஆகி விட்டது. இப்போது புதிய வீடு, புதிய கார்...

புதிய வானம் புதிய பூமி..எங்கும் பனிமலை பொழிகிறது, நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ண பூ மழை பொழிகிறது என்ற பாடலுடன் விமானம் ஏறுகிறான், ஊர் நோக்கி. பறந்து வந்த விமானம் பருவ நிலை கோளாறு, என்ஜின் கோளாறு என்று ஏதோ நடக்க, கடலில் விழுந்து தண்ணீரோடு சங்கமமாகிறது.

அன்பு கணவனின் ஜனாஸா ஊர் வர வேண்டும். வீட்டில் எல்லோரும் ஆலோசனை செய்கிறார்கள். கணவன் ஆசையுடன் வாங்கிய காரில் அவனது உடலை கொண்டு வாருங்கள் என்று மனைவி சொன்னபோதுவீட்டில் உள்ளவர்கள் மறுக்கிறார்கள். போயும் போயும் மய்யிதையா புதிய காரில் கொண்டுவருவார்கள். வாடகைக்கு ஆம்புலன்ஸ் பிடித்து சென்று கணவனின் ஜனாஸா அதில் வருகிறது.

மய்யித்தை எங்கே மக்கள் பார்வைக்கு வைப்பது, மீண்டும் ஆலோசனை. கணவன் புதிதாக கட்டிய வீட்டில் வைக்கலாம். மனைவி சொல் மீண்டும் மறுக்கப்படுகிறது. போயும் போயும் புதிய வீட்டில் முதல் முதலாக மய்யிதையா வைப்பார்கள்...பழைய வீட்டில் மய்யித் வைக்கப்படுகிறது. உற்றார் உறவினர்கள் வருகிறார்கள், அழுகிறார்கள், அவர்களுக்கு தேநீர், பகல் உணவு விமரிசையாக தயாரிக்கப்பட்டு விருந்தோம்பலுடன், மய்யித் மஹல்லா பள்ளிவாசலுக்கு எடுத்து செல்லப்பட்டு, தொழுகை முடிந்து நல்லடக்கம் செய்யப்படுகிறது. மனைவி தனிமைபடுத்த படுகிறாள். அவள் எண்ண ஓட்டங்கள் .பின்னோக்கி செல்கிறது.

KULLU MAN ALAIHA FAANIN VA YABQA VAJHU RABBIKA THUL JALAALI VAL IKRAAM.....KULLU NAFSIN THAAYIQATHUL MOWTH....என்ற இறை வசனங்கள் அவளுக்கு ஓதி காண்பிக்கப்படுகின்றன. பொறுமையாக இருப்பவர்களுக்கு அல்லாஹ்வின் சாந்தியும் ரஹ்மத்தும் வந்தடையும் என்ற உப தேசங்கள் அவளுக்கு சொல்லபடுகின்றன...உடைந்து போய் அவள் அந்த புதிய வீட்டையும் காரையும் மாறி மாறி வெறித்து பார்க்கிறாள்...கடிதம் இப்படி முடிகிறது. அல்லாஹு அக்பர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by: nizam (india) on 07 May 2013
IP: 115.*.*.* India | Comment Reference Number: 27264

பஷீர் அவர்களின் கட்டுரை சவுதியின் ஒரு பக்க வாழ்கையைத்தான் காட்டுகிறது. மறுபக்கத்தை பல ஆண்டுகள் சௌதியில் பணிபுரிந்த நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர்களாக இருந்தவர்களுக்கு தெரியும் காயல் எவ்வாறு இருந்தது பல ஓலை வீடுகள் படித்தவர்களுக்கு வேலை இல்லை இந்திய சோசலிசம் என்ற கிறுக்கு கொள்கையில் சென்று மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது. அப்போது கை கொடுத்தது சவுதிதான்.

அப்போது பம்பாயில் வேலை தேடியவர்களுக்கு தெரியும். விளம்பரத்திலே முஸ்லிம்கள் மட்டும் என்று குறிப்பிட்டு தங்களது இஸ்லாமிய பாசத்தை வெளிபடுத்தினார்கள். பல காயல்ர்கள் சவுதி சென்று தங்கள் ஒட்டு குடித்தன வீடுகளையெல்லாம் வசதியான வீடுகளாக ஆகினார்கள். பிள்ளைகளை விரும்பிய படிப்பு படிக்க செய்தார்கள். வாழ்க்கை தரத்தை உயர்த்தினார்கள். என்னுல்பட பல காயளர்கள் இறைவழியில் தங்கள் வாழ்க்கை அமைத்ததே சவுதி சென்ற பிறகுதான். நான் சவுதி அரசாங்கத்தில் பணிபுரிந்தபோது அன்று ஒரு தொழுகை ஜாமாதுக்கு வராவிட்டால் அந்த நபரோடு எங்களது உயர் அதிகாரி பேசமாட்டார்.

சரி விசயத்துக்கு வருவோம். சவுதியில் இந்தியர்கள் படும் பிரட்சினைக்கு காரணம் என்ன. எனக்கு தெரிந்து ஒரு சிலரை தவிர சவுதி அரபிகள் இறை அச்சம் உள்ளவர்கள். பொய் பேசினால் பிடிக்காது. அவர்களை கெடுத்தது யார் என்றால் இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியினர்க்களை பம்பாய் ஏஜெண்டுகளை குற்றம் சாட்டபடுகிறது.

அரபிகளிடம் சம்பளத்தை கொடுக்காதே.சம்பளத்தை குறை. அதிக நேரம் வேலை வாங்கு போன்ற வக்கிரத்தனமான யுக்திகளை இவர்கள்தான் சொல்லிகொடுத்தார்கள் என்று பொதுவாக பேசபடுகிறது.

என்னோடு பணிபுரிந்த ஒரு பிலிப்பின்ஸ் நாட்டவர் கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் தெரியவில்லை.Why your indians kill each other? என்று. ஆனால் நமது இந்தியர்க்களை போல வேறெந்த நாட்டவரும் சவுதியில் துன்பப்படவில்லை. அதற்க்கு காரணம் நமது தூதரக அதிகாரிகள் புகார்கள் வரும்போது அலட்சியமாக நடந்துகொள்கிறார்கள்.

சரி அதென்ன அரபு நாட்டு கொடுமைகள் மட்டும் பிரலமாக பேச படுகிறது.வேறெங்கும் நடக்கவில்லையா மலசியாவில் ரப்பர் தோட்டத்தில் இந்திய தொழிலார்கள் கொடுமை, ரஸ்சியாவில் சர்கஸ் தொழிலுக்கு அழைத்து சென்று இந்தியர்கள் தவிப்பு, பிரிட்டனில் டாக்டர்கள் வேலை இல்லாமல் கோவிலில் உணவு உண்டு காலத்தை கடத்துவது போன்ற நிகழ்வுகள் உண்டு. ஆனால் வெளிச்சத்துக்கு வருவதில்லை. இந்த கட்டுரையை பற்றி சொல்லவில்லை. ஆனால் சவுதியை பற்றி சொல்லும் பல விசயங்கள் இங்கு பணிபுரிந்த மாற்றுமதத்தினர் இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கண்டு பொறாமையினால் புனை பெயர் வைத்து திரித்து எழுதபடுபவை.

சரி இந்த பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன? எனது பணிவான வேண்டுகோள் தங்களிடம் படிப்பு அல்லது ஏதாவது தொழில் தெரியாதவா? தயவுசெய்து சவுதி மட்டுமல்ல ஒட்டு வெளிநாட்டு ஆசையை மறந்துவிடுங்கள். ஏனென்றால் அந்த நாட்டு தொழிலாளர் அமைச்சகமே சொல்கிறது படிக்காத கைத்தொழில் தெரியாதவர்கள் எங்களது நாட்டுக்கு வரவேண்டாம் என்று. சரி வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்ததா.

முதலில் தங்களது உறவினர் நண்பர் அந்த நாட்டில் இருந்தால் அவரை தொடர்புகொண்டு அந்த கம்பனி ஒழுங்காக சம்பளம் கொடுக்கும் கம்பனியா? தொழிலார்களை ஒழுங்காக நடத்துகிறதா? என்று விசாரிக்க வேண்டும். இரண்டாவது அக்ரிமன்ட் இல் சட்டவிரோத வாசகங்கள் உள்ளதா என்று கவனமாக படித்து கையெழுத்து போடா வேண்டும்.

கால முன்னேற்றத்தில் தற்போது இனையத்தில் glassdoor.com என்ற இணையதளம் உள்ளது. அதில் அந்த கம்பனியில் ஏற்கனேவே பணிபுரிந்தவர்கள் அந்த கம்பனியின் சாதக பாதக விசயங்களை குரிபீட்டுஉள்ளார்கள். இதையெல்லாம் கவனித்து வெளிநாட்டு வாழ்கையை அமைத்தால் அது வசந்தமாக அமையும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by: shajahan m.m (chennai) on 08 May 2013
IP: 122.*.*.* India | Comment Reference Number: 27285

அஸ்ஸலாமு அலைக்கும் . பஷீர் மேற்கோள்காட்டிய புத்தக வரிகள், கதையாக படிப்பதற்கு வேண்டுமானால் சுவாரசியமாகவும், சோகமாகவும் இருக்கலாம். ஆனால் உண்மை நிலையை விளக்க அது சரியான விளக்கம் ஆளா. எதுகை மோனை அமைய வேண்டும் என்று அதிக விசயத்தை மிகைபடுத்துவது, நடப்புகளை கதையாக சொல்லும் புத்தகங்களின் இயல்பு..

சவூதியில் கண்டிப்பான ஷரியத் சட்டம் பின்பற்ற படுகிறது. அதில் தன நாட்டவர் அல்லது மற்ற நாட்டவர் என்ற பாகுபாடு இல்லை. இதற்க்கு ஏராளமான உதாரணம். அவற்றில் ஒன்று தான்,சவுதி இளவரசி ஒருத்தி., சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு படிக்க வெளிநாடு இருக்கும்போது, தகாத உறவில் ஈடுபட்டதால், சம்பவம் நடந்த குறைந்த நாட்களில், கொல்லபட்டார் .இதுபோல் பல பல உதாரணம்.. சட்டம் ஒன்று தான். ஆனால் சட்டத்தை நடைமுறைபடுத்தும் அதிகாரிகள் தவறு இழைக்கலாம். அதற்காக அந்நாட்டின் சட்டமே தவறு என்று சொல்வது அறியாமையின் உச்சகட்டம்.இதை பற்றி சில வாரங்களுக்கு முன் உணர்வு இதழில் மிக விவரமாக ஒரு கட்டுரை வந்தது..

see http://www.tntj.net/141754.html

அனால் அந்த நாட்டின் வெளிநாட்டு கொள்கை தன மக்களுக்கு ஒரு அரசியல் உரிமை, மற்ற நாட்டு மக்களுக்கு வேற உரிமை. இது சவுதி யில் மட்டும் அல்ல உலகில் உள்ள எல்லா நாட்டின் வெளிநாட்டு கொள்கை மற்றும் EXPATRIATE கொள்கை இப்படி தான் இருக்கும்., எல்லா நாடுகளும், தன மக்களுக்கு தான் எல்லாவற்றிலும் முன்னுரிமை கொடுக்கும்..அனால் சவுதி மட்டும் தான் சமீபத்தில் வெளியிட்ட சட்டத்தில் கூட எந்த குறிப்பிட்ட நிறுவனத்தில் குறிப்பிட்ட துறையில் வேலைபார்ப்பவர்களில் குறைந்த பட்சம் 10%சதவிகிதத்தினர் மட்டும் சவுதி நாட்டவராக இருக்க வேண்டும் என்று கூறியது, அதன் பெருந்தன்மை தவிர, காட்டுமிராண்டி தனம் அல்ல.

சவுதி அரசோ நாடோ ஏரையும் பட்டு கம்பளம் விரித்து அங்கு அடிமை வேலை செய்ய வரவேற்க வில்லை. புத்தகத்தில் க்றிப்பிட்டுள்ளது போல் காட்டு அரபிகள் போல் உள்ளம் கொண்டவர்கள் பாலைவன சுடுமணலில் தவிப்பவர்கள் விரல் விட்டு என்னும் ஒரு சிலரே. இது போல் கொடுமையான கொண்டவர்கள் எல்லா நாட்டிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன் நம் நாட்டில் கொத்தடிமைகள் பற்றி பல முறை நாம் செய்தி தாள்களில் கேள்விப்பட்டுள்ளோம் அதைவிட மோசமா சவுதயில்

வேற வேலைக்கு சென்று, பாலைவன சுடுமணலில் மாட்டிகொல்வதை வைத்து, சவுதி கபிலை குறைகூறமுடியாது. இந்தியாவில் உள்ள TRAVEL AGENT , கஷ்டத்தில் உள்ள எமாற்றி அனுப்பும்போது, குறைகூறி தண்டிக்க படவேண்டியவர் அந்த TRAVELS AGENT தான். பொதுவாக சவுதி நிறுவனம் , தனது நிறுவனத்திற்கு வேலைக்கு வெளிநாட்டில் ஆள் தேவை படும்போது, அதுபற்றி விவரமாக TRAVEL AGENT இடம் கூறி, இன்னென்ன வேலைக்கு, இந்த தகுதியுடைய ஆள் தேவை என்று கூறிவிடுவார்கள். வேலையை மாற்றி, பொய் சொல்லி , அனுப்பி அங்கு கஷ்டபட வைப்பதே இந்த AGENT தான்.அப்படி இருக்க குறை ஒன்று கூட அந்த புத்தகத்திலோ, இந்த கட்டுரையிலோ இந்தியாவில் உள்ள AGENT பற்றி குறிப்பிடாதது , குருட்டு பார்வைதான்.

தனிமனித உரிமை மீறல் என்கு தான் நடக்க வில்லை.. சவுதி பற்றி எழுதும் பஷீர், சற்று இங்குள்ள நிலைகளை யோசிக்க வேண்டும்.. 16 மணி மணி நேர வேலைக்கு பின்னும் நாள் ஒன்றுக்கு 100 க்கும் குறைவாக சம்பளம் கொடுக்கும் முதலாளில் எத்தனை பேர் இங்கே.. முன் தொகையாக ஒரு அமௌன்ட் கொடுத்து விட்டு, பின் அந்த மனிதனை நம் நாட்டில் விலங்கை விட கேவலமாக நடத்தி எந்த சம்பளமும் கொடுக்காத அவல நிலை சவுதியில் இல்லை..

இந்திய போன்ற வளரும் நாடுகளில் உள்ள எதனை பேர் சவுதி வைத்து வாழ்வில் வளம்பெருகிரார்கள், எத்தனை பேர் தனது களத்தை கஷ்டமில்லாமல் தள்ளுகிறார்கள், எத்தனை பேர் அங்கு சம்பாதித்து, இங்கு பல தொழில் நிறுவங்களை தொடக்கி இருக்கிறார்கள்

ஏதோ விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டும் இப்படி பாலைவனத்தில் மாட்டிகொல்வதை மட்டுமே, சவுதியில் நடக்கும் நிகழ்வாக காட்டி இருப்பது, ஆசிரியரின் குறிகிய கண்ணோட்த்தையும், அதிக அறியாமையும்தான் காட்டுகிறது..

மீண்டும் கூறுகிறேன், புத்தகங்கள்,படிக்க , நேரம் போக காலம் தாள தான் உதவுமே தவிர, ஒரு நாட்டின் உண்மை நிலையை பிரதி பலிக்க ஆண்நாட்டு சட்டங்களை தெரிந்து விட்டு அங்குள்ள உண்மை நிலையை அங்குள்ள நம் நாட்டு தூதரகம் மூலம் தெரிந்து கொண்டு எழுதுவது நல்லது.. அப்படி இல்லையென்றால், அங்கு பொய் பிழைக்கும் அனைவரையும் இகழ்வதாகவே என்ன தோன்றும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. ஃ பென்டாஸ்டிக் பென்யாமீன்!
posted by: kavimagan (qatar) on 09 May 2013
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 27308

நண்பர் பஷீர் அவர்களின் இந்தக் கட்டுரை இருவேறு கருத்துக்களுக்கு உள்ளாகி இருப்பதில் வியப்பேதும் இல்லை. இந்தக் கட்டுரையை ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு எதிரானதாகக் கருதுவதற்கு, ஆடு ஜீவிதத்தில் இடம் பெறாத, பஷீரின் சுய அலசலும், ஆதங்கமும் காரணமாக அமைந்துவிட்டது.

இந்தப் பதிவு வெளிவருவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, பென்யாமீன் எழுதிய புத்தகத்தை, மலையாள நண்பர் ஒருவர் உதவியுடன் மிகுந்த சிரத்தையுடன் வாசித்து முடித்தேன். அற்புத எழுத்து நடையில், பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை படம் பிடித்துக் காட்டும் இந்தக் கதையின் மொழி ஆக்கத்தை வாசித்து விட்டு, இங்கு எழுதியவர்கள் தாங்கள் பதிவு செய்த கருத்துக்களை வாசித்து நோக்கினால், அவர்களுக்கே அது தவறாகத் தோன்றக் கூடும்.

ஆசிரியரின் எண்ணம் அரபு நாட்டு அவலங்களைப் படம் பிடித்துக் காட்டுவது மாத்திரமல்ல! கடல் கடந்து கனவுகளைச் சுமந்து செல்பவர்களின் துயரநிலை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற குறிக்கோளை நிறைவேற்ற அவர் தேர்ந்தெடுத்த களம் அரபு நாட்டுப் பாலைவனம்... அவ்வளவுதான்.

மொத்தத்தில் தாய்மண்ணில் இருந்து வெளியேறி பிறிதொரு நாட்டில் வேலை செய்தால் தங்கமும், வெள்ளியும் கை நிறைய அள்ளி வரலாம் என்ற நினைப்பு தவறு என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சம்.

அரபு நாட்டு அவலங்கள் தோலுரிக்கப் படும் போதெல்லாம் ஒரு சில நண்பர்கள் சரீஅத் சட்டத்தைக் கொண்டு முன்னிறுத்துவது வியப்பை அளிக்கிறது. சரியான சட்டங்கள் எப்படியெல்லாம் தவறாகக் கையாளப் படுகிறது என்பதுதான் முற்போக்கு எழுத்தாளர்களின் ஆதங்கமேயன்றி சட்டத்தை விமர்சிப்பது அல்ல..

மொத்தத்தில் பஷீரின் இந்தக் கட்டுரை இலக்கியத் தரம் வாய்ந்த, யதார்த்தத்தைப் பேசும் நல்லதொரு புதினத்தை அடையாளம் காட்டி இருக்கிறது. அவருக்கு எனது நன்றிகளும், வாழ்த்துக்களும்....

பஷீர்! விமர்சனங்கள் உங்கள் எழுத்தின் தரத்தை உயர்த்தட்டும்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by: K S Muhamed shuaib (Kayalpattinam) on 11 May 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27383

தம்பி பஷீர் சொல்வது அனைத்தும் உண்மையோ உண்மை .இதில் நான் புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை

இது குறித்து நான் முன்பே "திரை கடலோடி தேடியது என்ன ?" என்ற தலைப்பில் இரண்டு கட்டுரைகளை எழுதியுள்ளேன் .



இது ஒரு வாசக புரிதலுக்காக மட்டுமே இங்கு குறிப்பிடப்படுகிறது வேறு எந்த உள்நோக்கமும் இதற்க்கு இல்லை.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:.
posted by: Shahul Hameed (Al Jubail) on 14 May 2013
IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27413

Assalamu Alaikkum.

This article is good article and pratically people suffer a lot due to unsafe job. But, we say islam in Saudi Arabia but people in saudi arabia differs.

Our people should not come for those Jobs such as drivers, house maids and other low level categories. Every human has a valuable asset.

High level jobs such as Doctors, Engineers etc are respected here.

Regards
Shahul Hameed (SHM)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved