Re:...கொட்டிக் கிடக்குது சவுதியிலே posted bymackie noohuthambi (kayalpatnam)[07 May 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27263
ஆசிரியர் அவர்கள் 1980 களுக்குள் சென்றால் இதே போல் ஒரு செய்தி கிடைக்கும்.
கவிஞர் ஏ ஆர் தாஹா அவர்கள் அப்போது ஒரு ஒலி நாடா வெளியிட்டார்கள்.அப்போது குறுந்தகடுகள் இல்லாத காலம். முதல் பகுதி A இங்கிருந்து பம்பாய் சென்று சவூதிக்கு விமானம் ஏறும் வரை நமது மக்கள் சந்திக்கும் சிரமங்கள். பகுதி B சவுதி சென்று இறங்கியதிலிருந்து நமது மக்கள் சந்திக்கும் சவால்கள் பிரச்சினைகள் எல்லாவற்றையும் மிக தெளிவாக அதில் கூறியுள்ளார்கள். யாரிடமாவது இருந்தால் கேட்டு போட்டு பாருங்கள்.
நீங்கள் இப்போது எழுதியுள்ள செய்திகள் எங்களுக்கு புளித்துப் போனவை. ஆனாலும்கூட, நமது நாட்டில் தினசரி நடந்துவரும் பணம் இரட்டிப்பு, பைனான்ஸ், சீட்டு, ஆடு, தேக்கு மரம் ஈமு கோழி போன்ற ஏமாற்று வேலைகளை மக்கள் ஜீரணித்துக் கொண்டு மீண்டும் அதில் முதலீடு செய்து எமாறுவதுபோல், அரபு நாட்டு விசாவுக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களும் ஏமாந்து கொண்டிருப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். அந்த காலத்தில் நமது நாட்டில் இவ்வளவு பெரிய சம்பளங்கள் இல்லை, படிப்புக்கள் இல்லை.அப்போது அதை தவிர வேறு வழி தெரியவில்லை. ஆனால் இப்போதும் அது தொடர்கதையாக இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது.
சமீபத்தில் துபையிலிருந்து ஒரு கடிதம் வந்தது. கற்பனை என்றாலும் எல்லோருக்கும் அது ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும்.
ஒரு இளம் கணவன் கனவுகளுடன் அரபு நாடு செல்கிறான். 3,4 வருடங்கள் வேலை பார்த்து விட்டு லீவில் நாடு திரும்ப ஆசைப் படுகிறான். அவனது ஆசை நாயகி அவனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள். நாம் தனியாக குடியிருக்க ஒரு வீடு கட்டினால் சந்தோஷமாக, மாமன் மாமி மச்சிமார் பிரச்சினை இல்லாமல் ஜாலியா தனி குடித்தனம் நடத்தலாம். எனவே கொஞ்சம் தியாகம் செய்யுங்கள்.பணம் அனுப்புங்கள், வீட்டு வேலை ஆரம்பித்து விட்டேன் கட்டி முடிந்ததும் வரலாம்...
நியாயம்தானே, கணவன் பயணத்தை ஒத்திப் போட்டு, உழைக்கிறான், பணம் அனுப்புகிறான். வீடும் கட்டி முடிந்தது. ஊர் வர ஆசைப் படும்போது மீண்டும் ஒரு கடிதம் அன்பு மனைவியிடமிருந்து. ஒரு கார் வாங்கினால், மாமா மச்சானை எதிர்பார்க்காமல் நாம் இருவரும் அதில் சுற்றுலா சென்று வரலாம், முப்பது நாளும் பௌர்ணமிதான்..ஜாலிதான், கொஞ்சம் ஏற்பாடு பண்ணுங்கள். மனைவியின் ஆசை கணவனுக்கு சரி எனப்படுகிறது. உழைக்கிறான், கார் வாங்கி ஆகி விட்டது. இப்போது புதிய வீடு, புதிய கார்...
புதிய வானம் புதிய பூமி..எங்கும் பனிமலை பொழிகிறது, நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ண பூ மழை பொழிகிறது என்ற பாடலுடன் விமானம் ஏறுகிறான், ஊர் நோக்கி. பறந்து வந்த விமானம் பருவ நிலை கோளாறு, என்ஜின் கோளாறு என்று ஏதோ நடக்க, கடலில் விழுந்து தண்ணீரோடு சங்கமமாகிறது.
அன்பு கணவனின் ஜனாஸா ஊர் வர வேண்டும். வீட்டில் எல்லோரும் ஆலோசனை செய்கிறார்கள். கணவன் ஆசையுடன் வாங்கிய காரில் அவனது உடலை கொண்டு வாருங்கள் என்று மனைவி சொன்னபோதுவீட்டில் உள்ளவர்கள் மறுக்கிறார்கள். போயும் போயும் மய்யிதையா புதிய காரில் கொண்டுவருவார்கள். வாடகைக்கு ஆம்புலன்ஸ் பிடித்து சென்று கணவனின் ஜனாஸா அதில் வருகிறது.
மய்யித்தை எங்கே மக்கள் பார்வைக்கு வைப்பது, மீண்டும் ஆலோசனை. கணவன் புதிதாக கட்டிய வீட்டில் வைக்கலாம். மனைவி சொல் மீண்டும் மறுக்கப்படுகிறது. போயும் போயும் புதிய வீட்டில் முதல் முதலாக மய்யிதையா வைப்பார்கள்...பழைய வீட்டில் மய்யித் வைக்கப்படுகிறது. உற்றார் உறவினர்கள் வருகிறார்கள், அழுகிறார்கள், அவர்களுக்கு தேநீர், பகல் உணவு விமரிசையாக தயாரிக்கப்பட்டு விருந்தோம்பலுடன், மய்யித் மஹல்லா பள்ளிவாசலுக்கு எடுத்து செல்லப்பட்டு, தொழுகை முடிந்து நல்லடக்கம் செய்யப்படுகிறது. மனைவி தனிமைபடுத்த படுகிறாள். அவள் எண்ண ஓட்டங்கள் .பின்னோக்கி செல்கிறது.
KULLU MAN ALAIHA FAANIN VA YABQA VAJHU RABBIKA THUL JALAALI VAL IKRAAM.....KULLU NAFSIN THAAYIQATHUL MOWTH....என்ற இறை வசனங்கள் அவளுக்கு ஓதி காண்பிக்கப்படுகின்றன. பொறுமையாக இருப்பவர்களுக்கு அல்லாஹ்வின் சாந்தியும் ரஹ்மத்தும் வந்தடையும் என்ற உப தேசங்கள் அவளுக்கு சொல்லபடுகின்றன...உடைந்து போய் அவள் அந்த புதிய வீட்டையும் காரையும் மாறி மாறி வெறித்து பார்க்கிறாள்...கடிதம் இப்படி முடிகிறது. அல்லாஹு அக்பர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross