Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[07 May 2013] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27268
முதலில், இந்த கூட்டம் அமைதியாக நடந்து முடிந்ததற்கு வல்ல ரஹ்மானுக்கும் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்.
என்னமோ....., தீர்மானங்கள் எல்லாம் நிறை வேற்றுவதில் குறை இல்லை, ஆனால் நடைமுறை செய்யப்படுகிறதா..? ஒன்றும் கிடையாது. ஏட்டில் நன்றாக உள்ளது.
* நம் நகராட்சி பணிகளை எடுத்து நடத்த ஏன் வேறு ஒப்பந்தக்காரர்கள் தயங்குகிறார்கள்? ஒருவர் மட்டும் தானா?
* நகராட்சி அனுமதி பெற்ற ப்ளம்பர்களை நியமித்தல்:-
- எந்த அனுமதி பெற்ற பிளம்பர் வேலை செய்கின்றார், அவருக்கு கொடுக்க வேண்டிய காசை கொடுத்து விட்டு, மற்றவர்கள் தான் வேலை பார்க்கின்றார்கள், எந்த பிளம்பர் குழிக்குள் இறங்கி வேலை செய்கின்றார்.
* குடும்பக்கட்டுப்பாடு பண்ணின நாய்கள் எல்லாம் குடும்பத்துடன் உலாவருகின்றன, முன்பை விட வெறி பிடித்தும், நோய் பிடித்தும் அலைகின்றது. திரும்பவும் அந்த நாய்களையே பிடித்து குடும்பக்கட்டுப்பாடு பண்ணப்போகிறார்களோ என்னவோ..! ஐயா சாமி உடைய கருத்து சரி தான்.
* கற்புடையார் பள்ளி குளத்தை தூர்வாறல் :-
- இருக்கும் குளங்களை எல்லாம் நகராட்சி கட்டுப்பாட்டுக்கு கொண்டு வாருங்கள், நான் சிறுவனாக இருக்கும் போது பார்த்த குளங்கள் ஒன்றுமே இன்று இல்லை. இன்றைய தலை முறைக்கே குளங்கள் என்றால் தெரிவது இல்லை, நோட்டில் ஒட்டும் குளம், ஆறு, கடல் என்ற படங்களை காட்டி தான் விபரம் சொல்லவேண்டியது உள்ளது.
எல்லாம் சரி தான், குத்துக்கல் தெருவில் உள்ள, மொகுதூம் பள்ளி வளாகத்தில் உள்ள தண்ணீர் தேக்க தொட்டி என்றைக்கு பயன்பாட்டுக்கு வரும்.? இன்று வரும் நாளை வரும், வால்வு ஆடர் கொடுத்து உள்ளோம் - வந்ததும் சரியாகி விடும் என்றார்களே..!
நம் MLA ஐயா அவர்களுக்கு முன்பாக, இன்னும் மூன்று மாதத்தில் அனைத்தும் ரெடி ஆகி, செயல்பாட்டுக்கு வந்து விடும் என்று உத்தரவாதம் கூட கொடுத்தார்களே.! அந்த மூன்று மாதம் இன்னும் வரவில்லையோ..?
அனைத்தும் நன்மையாக அமைய இறைஞ்சுகிறேன், வல்லோனிடம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross