காயல்பட்டினம் நகராட்சியின் சாதாரண கூட்டம், 29.04.2013 திங்கட்கிழமை காலை 12.30 மணியளவில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார், நகர்மன்ற துணைத்தலைவரும், 11ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான், 12ஆவது வார்டு உறுப்பினர் ஆர்.ரெங்கநாதன் என்ற சுகு ஆகியோரைத் தவிர மற்ற அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருட்களும், அவை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் வருமாறு:-
தெரு விளக்குகள் பராமரிப்பு:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
பொது கழிப்பிடம்:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
தெரு விளக்கு உதிரி பாகங்கள் வாங்கல்:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
பொதுக் கழிப்பிடம் இடமாற்றம்:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
ஈக்கியப்பா தைக்கா அருகில் புதிய சாலை:
இதுகுறித்து, வருவாய்த்துறை மூலம் இட ஆய்வு மேற்கொண்டு, அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
தெரு விளக்கு பராமரிப்பு தனியார் மயம்:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
தினசரி சந்தையை பழுது பார்த்தல்:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
கிணறு ஏலத்தை ரத்து செய்தல்:
தேவை ஏற்பட்டால், விடப்பட்ட ஏலத்தை ரத்து செய்வதென தீர்மானிக்கப்பட்டது.
டி.சி.டபிள்யு. ஆலை தொடர்பான விபரங்கள்:
இதுகுறித்த விபரங்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் காயல்பட்டினம் நகராட்சிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விபரங்கள் எங்கே என்றும் நகராட்சி ஆணையரிடம் நகர்மன்றத் தலைவர் கேட்டார்.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து அப்படி கடிதம் எதுவும் பெறப்படவில்லை என ஆணையர் கூறினார். எனவே, இப்பொருள் குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நகராட்சி நிதிநிலையறிக்கை:
2013-2014ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்க மன்றம் அனுமதி வழங்குகிறது.
ஜெனரேட்டர் பழுது பார்த்தல்:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள நபர்கள்:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
தெரு நாய்களுக்கு கருத்தடை:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
ஏற்கனவே ஊசி போடப்பட்ட நாய்கள் தற்போது சொறி நாய்களாகத் திரிவதாகவும், சில நாய்கள் குட்டிகளும் ஈன்றுள்ளதாகவும், இது ஒரு பயனற்ற நடவடிக்கை என்றும் 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி கூறினார்.
துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
தேங்கிய மழை நீரில் தெளிக்க மருந்து வாங்கல்:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
கால்நடை மருத்துவமனை தொடர்பான தீர்மானம்:
இதுகுறித்து, விவாதித்து முடிவு செய்திட தீர்மானிக்கப்பட்டது.
தெரு விளக்கு மாட்டியதற்குக் கூலி:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
கணனி ப்ரிண்டர் டோனர் ரீஃபில்:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
தற்காலிக பணியாளர் பணி நீட்டிப்பு:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
சொளுக்கார் தெருவில் புதிய தார் சாலை:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
பெரிய நெசவுத் தெரு ஒருவழிப்பாதையில் புதுிய சாலை அமைத்தல்:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
மீன் இறக்குதளம்:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
சிவில் கட்டுமானப் பணிகள்:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
திட்ட உதவி (தற்காலிக) அலுவலர் பணி நீட்டிப்பு:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
நகராட்சிக்கென நிழற்படக் கருவி வாங்கல்:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
நகராட்சி புதிய அலுவலகக் கட்டிடப் பணி:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
லாரி மூலம் குடிநீர் வினியோகம்:
தேவைப்பட்டால் வேலை உத்தரவு வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
தேவைப்பட்டால் வேலை உத்தரவு வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
குடிநீர் வினியோகத்தை அளக்கும் கருவி:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
ட்ராக்டர் எஞ்சின் வாங்கல்:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
குடிநீர் வினியோகக் குழாய் உதிரிபாகங்கள் வாங்கல்:
இப்பொருட்களை வாங்கிட ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை நகர்மன்றத் தலைவர் நினைவூட்டினார்.
ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 6 மாதத்திற்குள் அதுகுறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிடில், அத்தீர்மானம் தானாகவே செயலிழந்துவிடும் என்றும், இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும், நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
எனவே, இப்பொருட்களை வாங்கிட அனுமதி வழங்கி மீண்டும் தீர்மானிக்கப்பட்டது.
நீக்கப்பட்ட கூட்டப்பொருள்:
முந்தைய (31ஆவது) கூட்டப்பொருளே மீண்டும் தவறுதலாக இடம்பெற்றுள்ளதால், இப்பொருள் நீக்கப்பட்டது.
ஏலம் விடப்பட்டதற்கு ஒப்புதல்:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
புறநகருக்கு லாரி மூலம் குடிநீர்:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
குடிநீர் வினியோகக் குழாய் பழுதுகளை சரிசெய்தல்:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்து வாங்கல்:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
ப்ளீச்சிங் பவுடர் வாங்கல்:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
வாகனம் பழுது பார்த்தல்:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
8 வார்டுகளின் துப்புரவுப் பணி தனியார்மயம்:
நகராட்சி நிர்வாக ஆணையத்திடம் ஒப்புதல் பெற்ற பின் பிரேணனை அனுப்பிட மன்றம் தீர்மானிக்கிறது.
தண்ணீர் கிடைக்காத பகுதிகளுக்கு சிறப்பு ஏற்பாடு:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
நகராட்சி அனுமதி பெற்ற ப்ளம்பர்களை நியமித்தல்:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
புதிய ப்ளாஸ்டிக் நாற்காலிகள் வாங்கல்:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
கற்புடையார் பள்ளி குளத்தை தூர்வாறல்:
அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
மேசைப் பொருள்:
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜெ.சி.பி. இயந்திரம் மூலம் புதர்களை அகற்றல் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகளை நிறைவேற்றிட ஒப்பந்தப் புள்ளி கோரும் கூட்டப் பொருள் மேசைப் பொருளாக (Table Agenda) வைக்கப்பட்டு, அதற்கு அனுமதி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
முன்னதாக, காயல்பட்டினம் நகருக்கு நலத்திட்டங்கள் வழங்கி, தமிழக சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதற்காக கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தில், காரசாரமான விவாதங்களைத் தொடர்ந்து, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கள உதவி:
M.A.புகாரீ (48)
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது @ 18:08 / 09.05.2013] |