எதிர்காலத்தை நினைத்து வருந்தும் நம் சகோதரர்கள் படித்த பட்டதாரிகள்.. posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[08 May 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27279
10 உறுப்பினர்கள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் சேர்த்தாலும் சரி..! பி ஜே பி யில் சேர்த்தாலும் சரி..! இன்னும் பிற கட்சியில் இணைந்தாலும் சரி...! இதனால் மக்களுக்கு என்ன நன்மை...?
முக்கியமான ஒன்றை கவனித்தீர்களா...?
பொருள் எண் 19 - தற்காலிக பணியாளர் பணி நீட்டிப்பு:
நகராட்சியில் தற்காலிக பணியாளர்களாக பணி செய்து வரும் 14 நபர்களும் யார் மூலம் பணியில் சேர்க்கப்பட்டார்கள்..? இன்று நமது நகரில் பல பேர் படித்து டிகிரி முடித்து வேலை வாய்ப்பு அலுவகலத்தில் தனது பெயரை சட்ட பூர்வமாக பதிவு செய்து வைத்து அரசு வேலைக்காக பல வருடம் காத்திருந்து வரும் இச்சூழலில் இன்று நகராட்சியில் தற்காலிக பணியாளர்களாக பணி செய்து வரும் 14 நபர்களும் இப்பணியில் நீடிக்க வேண்டுமா...?
நகரின் நன்மைக்காக நகர்மன்றத்தில் சேவை செய்வேன் என்று தன்னை சொல்லிகொள்ளும் உறுப்பினர்களே..! எவர் மூலமோ பணியில் சேர்க்கப்பட்டு தற்காலிக பணியாளர்களாக இருக்கும் இவர்களை நீக்கி விட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்து வேலைக்காக எதிர்பார்த்து கவலையுடன் காத்திருக்கும் நமதூரில் பிறந்து வளர்ந்த (ஆண் - பெண்) படித்த ஏழை பட்டதாரிகள் நகர்மன்றத்தில் பணி புரிய ஆவலுடன் பல பேர் இருக்கிறார்கள்..
உறுப்பினர்களே முதலில் முறைப்படி படித்த பட்டதாரிகளுக்கு முக்கியத்துவும் கொடுங்கள்..! வேலைவாய்ப்பு அலுவகலத்தில் பதிவு செய்தவர்களின் வரிசை படி நகர்மன்றத்தில் வேலைவைப்பை வழங்க ஏற்பாடு செய்யுங்கள்..
நமது சகோதர - சகோதிரிகள் பட்ட படிப்பை முழுமையாக படித்து முடிக்க பல பேரிடம் பண உதவி பெற்று இன்று கடனாளிகளாக நம் சகோதரர்கள் - சகோதிரிகள் கரையேற தவித்து கொண்டு அதில் இருந்து மீள முடியாமல் இருக்கிறாக்கள்..!
உங்களை போன்ற உறுப்பினர்கள் நேர்மையாக நீதியின் பக்கம் மனது வைத்தால் இந்த சகோதர - சகோதிரிகளை கண்டிப்பாக நமது நகர்மன்றத்தில் அலுவலக பணியில் நீங்கள் அமர்த்தலாம்...
நகராட்சியில் தற்காலிக பணியாளர்களாக பணி செய்து வரும் 14 நபர்களும் முறையாக பணியில் சேர்ந்து இருக்கிறார்களா..? என்று என்றாவது தலைவி உட்பட உறுப்பினர்கள் நீங்கள் நகரமன்ற தீர்மான கூட்டத்தில் விவாதித்தது உண்டா...? இல்லையெனில் இனி நடக்கும் கூட்டத்திலாவது விவாதித்து இதற்க்கு (நமதூரின் படித்த பட்டதாரிகளுக்காக) ஒரு நல்ல முடிவை எடுக்குமாறு மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
இவர்களின் எதிர்பார்ப்பு உங்களின் மூலம் நிறைவேறட்டும்... வாழ்த்துவோம்..! போற்றி துவா செய்வோம் நான் உட்பட நகர்மக்கள் அனைவர்களும்...! இன்ஷா அல்லாஹ்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross