நமது சகோதரர்களுக்கு விரைவில் நமது நகர்மன்றத்தில் வேலை கிடைக்க நாம் நம்மால் இயன்ற குரலை ஒலிக்க செய்வோம்.. posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[08 May 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27283
அட்மின் அவர்களே இது விவாதமல்ல.. மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே... தயவு செய்து விவாதம் என்று தவிர்த்து விடாதீர்கள்...
சட்டம் தெரியாது சாடுவது தவறு...! என்று சொல்லும் சகோதரரே தற்காலிக பணியாளர்களின் பணி சம்பந்தமான விபரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்படும் தகவலை தாங்கள் விரைவில் என் கருத்தின் மூலம் சட்டம் என்ன சொல்கிறது என்று அறிவீர்கள்..!
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு அல்லவா முன்னுரிமை வழங்க படவேண்டும்...? முன்னால் - இந்நாள் நகர்மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் சிபாரிசின் மூலமும், ரோஜா சுய உதவி குழு - குசுபு சுய உதவி குழு என்று இப்படி அணைத்து சுய உதவி குழுக்கள் மூலமும் பணியில் அமர்த்தப்பட்டால் பாவம் டிகிரி படித்து பட்டதாரிகளின் நிலை தான் என்ன..? கொஞ்சம் நடுநிலையோடு சிந்தித்து பாருங்கள்...
மக்கள் மத்தியில் நியாயமான முறையில் விழிப்புணர்வு செய்தால் (கருத்து பதிந்தால்) நான் நகராட்சியில் மட்டுமல்ல உறுப்பினர்களுக்கும் உறுப்பினர்களின் அவரவர் ஆதரவாளர்கள் உட்பட அனைவருக்கும் நான் பொல்லாதவன் ஆகிறேன்... நியாயத்திற்காக அனைத்தையும் எதிர்கொள்ள தயார் என்ற மனநிலையில் உறுதியோடு இதை பதிகின்றேன்..
படித்து முடித்து வேலை வைப்பு அலுவலகத்தில் பதிவு செய்து (வரிசை அடிப்படையில்) நகரமன்ற வேலைக்காக காத்திருக்கும் சகோதரர்களுக்கு விரைவில் நமது நகர்மன்றத்தில் வேலை கிடைக்க நாம் நம்மால் இயன்ற குரலை ஒலிக்க செய்வோம்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross