ஆலை மென்மேலும் வளர வாழ்த்துகிறோம். posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[15 May 2013] IP: 113.*.*.* China | Comment Reference Number: 27416
நமது ஊர் தொழிற்சாலை அதிக லாபம் ஈட்டியதை அறிந்து மிக்க மகிழ்ச்சி.அது மென்மேலும் வளர்ந்து நம் ஊருக்கும் மக்களுக்கும் பயன்பெற வாழ்த்துகிறோம். இந்த ஆலையின் வாயிலாக நமது நகராட்சிக்கு அதிக வருவாய் கிடைக்க நம் நகராட்சி நிர்வாகம் முனைய வேண்டும்.ஆலை மூலம் நம் ஊர் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருக வேண்டும். எனக்கு தெரிந்து நம் ஊரை சேர்ந்த நிறைய கெமிக்கல் பட்டதாரிகள் வெளியூர் /வெளிநாடுகளில் வேலை பார்கின்றனர். அம்மாதிரி தகுதி வாய்ந்த நபர்களுக்கு ஆலை நிர்வாகம் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.
ஆலை மாசு விஷயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதி முறைகளை அது பேனி நடந்தாலே போதுமானது.யாரும் ஆலையை மூடச்சொல்லி கோர முடியாது.
அது புதிதாக தொடங்கவிருக்கும் மின் உற்பத்தி நிலைத்யத்தின் நிலை பற்றி தெரியவில்லை. இந்த மின் உற்பத்தி நிலையத்தை செயல்படுத்துவதன் மூலம் தனது தேவைக்கு போக அதிக மின்னுற்பத்தி செய்தால்,உபரி மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியத்திற்கு விற்கும் நிலை ஏற்படும் . அதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகள் பயனடையும்.நமது ஊரும் பயன் பெரும்.
ஆலையின் கட்டுப்பாட்டில் உள்ள CBSE பள்ளி 10 வது வகுப்பு வரை மட்டுமே CBSE பாட திட்டத்தில் இயங்குகிறது. 12 வது வகுப்பு வரை CBSE பாட திட்டம் தொடர வழிவகை செய்ய வேண்டும்.இதன் மூலம் நம் வட்டாரத்தில் கல்வியில் போட்டி அதிகரிப்பதோடு மெட்ரோபாலிடன் நகரங்களில் கிடைக்கும் உயர்தர கல்வி வசதி கிராமப்புற மாணவர்களுக்கும் குறைந்த செலவில் கிடைக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross