DCW நிறுவனத்தின் மார்ச் 31 முடிய காலாண்டு முடிவுகள் (Quarterly Results) இன்று வெளியாகி உள்ளன. இந்த காலகட்டத்தில் DCW வரவு 270 கோடி ரூபாய் என்றும், வரி மற்றும் இதர ஒதுக்கீடுகள் போக லாபம் 17 கோடியே 34 லட்சம் ரூபாய் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தின் (January 2012 – March 2012) வரவு 322 கோடி ரூபாய், லாபம் 3 கோடியே 67 லட்சம் ரூபாய்.
இக்காலாண்டில் DCW வின் குஜராத்தில் உள்ள சோடா ஆஷ் பிரிவின் வரவு 52 கோடி ரூபாய் (இலாபம் - 5.7 கோடி ரூபாய்), சாஹுபுரத்தில் உள்ள காஸ்டிக் சோடா பிரிவின் வரவு 120 கோடி ரூபாய் (இலாபம் - 24.05 கோடி ரூபாய்), பீ.வீ.சி. பிரிவின் வரவு 89 கோடி ரூபாய் (லாபம் - 2.84 கோடி ரூபாய்).
2012 - 2013 முழு ஆண்டின் வரவு 1318 கோடி ரூபாய். இதில் சோடா ஆஷ் பிரிவின் வரவு 183 கோடி ரூபாய் (இலாபம் – 10.29 கோடி ரூபாய்), சாஹுபுரத்தில் உள்ள காஸ்டிக் சோடா பிரிவின் வரவு 687 கோடி ரூபாய் (இலாபம் - 196.81 கோடி ரூபாய்), பீ.வீ.சி. பிரிவின் வரவு 430 கோடி ரூபாய் (நஷ்டம் - 19.22 கோடி ரூபாய்). வட்டி, வரிகளுக்கு பிறகான ஆண்டிறுதி லாபம் 104 கோடி ரூபாய்.
இன்று நடந்த கூட்டத்தில் பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு 18 சதவீத டிவிடென்ட் அறிவிக்கப்பட்டது.
மேலதிக விபரங்களுக்கு இங்கு அழுத்தவும்
|