ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயல் நல மன்றத்தின் 14ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 10ஆம் தேதி நடைபெற்றது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இறையருளால் எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் 14ஆவது செயற்குழுக் கூட்டம், 10.05.2013 வெள்ளிக்கிழமை அஸ்ர் தொழுகைக்குப் பின், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் டாக்டர் செய்யித் அஹ்மத் இல்லத்தில், மன்றத்தின் மக்கள் தொடர்பு செயலாளர் ஹாஜி ஏ.ஆர்.ரிஃபாய் தலைமையில் நடைபெற்றது. மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
இக்கூட்டத்தில், மருத்துவத் துறையில் உலக காயல் நல மன்றங்களை ஒருங்கிணைப்பதற்காக விவாதிக்கப்பட்டு வரும் ‘ஷிஃபா’ செயல்திட்டம் குறித்து மன்றத்தின் பிரதிநிதி டாக்டர் செய்யித் அஹ்மத் விவரித்தார். மேலும் இது விஷயத்தில் மைக்ரோகாயலின் நிலைப்பாடு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அனைத்துக் கூட்டங்களிலும் செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறும், மன்றத்தின் சந்தா தொகை சேகரிப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் மன்றத்தின் அடுத்த 15 செயற்குழுக் கூட்டம், இன்ஷா அல்லாஹ் வரும் ஜூன் மாதம் 14ஆம் தேதி நடைபெறும் என்றும் மன்றத்தின் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் மஹ்ழரீ தனதுரையில் தெரிவித்தார்.
நன்றியுரைக்குப் பின், மன்றப் பொருளாளர் மவ்லவீ ஹாபிஃழ் ஹுசைன் மக்கி துஆவைத் தொடர்ந்து, கஃப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். இக்கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக
தகவல்:
நோனா அபூஹுரைரா
மற்றும்
M.E.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
(செய்தித் துறை பொறுப்பாளர்)
படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்
|