காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில், மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டிகள், இம்மாதம் 12ஆம் தேதி (இன்று) துவங்கி, 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மே 15ஆம் தேதி திங்கட்கிழமை (இன்று) மாலையில் நடைபெற்ற முதலாவது காலிறுதிப் போட்டியில், காரைக்கால் கோச்சிங் சென்டர் அணியும், சென்னை சிட்டி பொலிஸ் அணியும் மோதின.
இப்போட்டியில், சென்னை சிட்டி பொலிஸ் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, இம்மாதம் 28ஆம் தேதி நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில், விளையாட தகுதி பெற்றுள்ளது.
காலிறுதிப் போட்டி வரை முன்னேறியமைக்காக, காரைக்கால் கோச்சிங் சென்டர் அணிக்கு இன்று இரவு 07.00 மணியளவில், சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் ஆறுதல் பரிசாக ரூபாய் 5 ஆயிரம் வழங்கப்பட்டது.
ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை பணப்பரிசை, அணி தலைவரிடம் வழங்கினார்.
|