காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 86ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 10.05.2013 வெள்ளிக்கிழமை (இன்று) இரவு 07.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படும்.
ரஜப் 05ஆம் நாள் - மே 16ஆம் தேதி (நேற்று) ஐந்தாம் நாள் நிகழ்ச்சி, காலையில் துவங்கியது. நேற்று ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மவ்லவீ ஹாஃபிழ் ஜெ.ஏ.தாவூத் மாஹின் மஹ்ழரீ வழங்கினார்.
தொழுகைக்காக உளூ (சுத்தம்) செய்வதன் சட்டங்கள், தொழுகையின் சட்டங்கள், தொழுகையில் பேண வேண்டிய ஒழுங்குமுறைகள் உள்ளிட்ட தலைப்புகளில் அந்த உரை அமைந்திருந்தது.
இன்று, ரஜப் 06ஆம் நாள் (மே 17) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, இலங்கை சம்மாங்கோட் பள்ளியின் இமாம் மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ வழங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
நடப்பாண்டில் ஒவ்வொரு நாளும் ஆற்றப்படும் உரைகளின் ஒலிப்பதிவுகளையும், முந்தைய ஆண்டுகளில் ஆற்றப்பட்ட உரைகளின் ஒலிப்பதிவுகளையும், http://www.bukhari-shareef.com/eng/audio/6/rajab-bayan-2013.html என்ற இணையதள பக்கத்தில் கேட்கவும், பதிவிறக்கம் செய்துகொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
|