காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில், மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டிகள், இம்மாதம் 12ஆம் தேதி (இன்று) துவங்கி, 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மே 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை (நேற்று) மாலையில் நடைபெற்ற போட்டியில், நெல்லை மாவட்ட கால்பந்துக் கழக அணியும், பெங்களூரு கிக்கர்ஸ் அணியும் மோதின.
ஆட்டம் துவங்கியது முதல் இரு அணிகளும் கோல் அடிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், இரு அணிகளின் கோல் கீப்பர்களது திறமைமிக்க தற்காப்பு நடவடிக்கை காரணமாக ஆட்ட நேர இறுதி வரை கோல் எதுவும் அடிக்க இயலாமல், சமநிலையில் ஆட்டம் முடிவுற்றது.
இதனைத் தொடர்ந்து, சமனுடைப்பு முறை கையாளப்பட்டது. அதில், 6-5 என்ற கோல் கணக்கில், நெல்லை மாவட்ட கால்பந்துக் கழக அணி வெற்றி பெற்று, இம்மாதம் 19ஆம் தேதியன்று நடைபெறவுள்ள இரண்டாவது காலிறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியைக் காண நகரின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.
இன்று மாலை நடைபெறும் போட்டியில், திருச்சி கஸ்டம்ஸ் அணியும், திருவனந்தபுரம் கோஸ்டல் கால்பந்துக் கழக அணியும் களம் காணவுள்ளன.
படங்களில் உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டினம்.காம் |