தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் மற்றும் இக்ராஃ கல்வி சங்கம் ஆகியவை இணைந்து ஒவ்வொரு ஆண்டும் - காயல்பட்டினத்தில் சந்தியுங்கள்
மாநிலத்தின் முதல் மாணவரை (MEET THE STATE TOPPER) நிகழ்ச்சியினை நடத்தி வருகின்றன.
இந்நிகழ்ச்சியில் - பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் - மாநில அளவில் முதல் இடம் பெறும் மாணவர் பங்கேற்று, காயல்பட்டினம்
பள்ளிக்கூடங்களில் இருந்து நடப்பு கல்வியாண்டில் அரசு பொது தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் கலந்துரையாடுவார். மேலும் நிறைவுற்ற கல்வியாண்டில், அரசு பொது தேர்வுகளில், காயல்பட்டினம் பள்ளிக்கூடங்களில் பயின்று நகரளவில் சாதனைகள் புரிந்த
மாணவர்களுக்கு பரிசுகளும் இந்நிகழ்ச்சியில் வழங்கப்படும்.
தொடர்ந்து 8வது ஆண்டாக - ஜூன் மாதம் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில், இவ்வாண்டு பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் (1200 க்கு) 1189 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்ற வித்யா விகாஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ். ஜெயசூரியா மற்றும் அதே மதிப்பெண்ணை பெற்று மாநிலத்தின் முதல் இடம் பெற்ற கிரீன்பார்க் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.அபினேஷ் ஆகியோரும் - காயல்பட்டினம் வருகை தரவுள்ளனர்.
சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவர்களை நிகழ்ச்சி நடைபெறும் தேதி மற்றும் இடம் விரைவில் வெளியிடப்படும்.
மாநில முதல் மாணவர் எஸ்.ஜெயசூர்யா ...
இடது புறத்திலிருந்து இரண்டாவதாக உள்ளவர் மாணவர் எஸ்.ஜெயசூரியா. திருச்செங்கோட்டில் அவர் குடும்பத்தினருடன் எடுக்கப்பட்ட
படம். இவரின் தந்தை 9 ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டு செயல்புரிய முடியாமல் உள்ளார். மாணவர் ஜெயசூரியா, MBBS
பயின்று, அதன் பின்னர் MS (Ortho) பயில திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில முதல் மாணவர் எஸ். அபினேஷ் ...
திண்டுக்கல்லில் அவர் குடும்பத்தினருடன் எடுக்கப்பட்ட படம். இவரின் தந்தை வங்கியில் பணிபுரிகிறார். இவரின் தாயார் பள்ளி
ஆசிரியை |