இம்மாதம் 23ஆம் தேதி வியாழக்கிழமையன்று இரவு 08.00 மணிக்கு, காயல்பட்டினத்தில், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சார்பில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இக்கூட்டத்தில், ‘மானுட வசந்தம்’ நிகழ்ச்சி நடத்துனரும், இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் செயலாளரும், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.
பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்படவுள்ளதாகவும், அனைவரும் கலந்துகொள்ளுமாறும், காயல்பட்டினம் நகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிளை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கூட்ட ஏற்பாடுகளை, நகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவரும், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினருமான ஏ.லுக்மான், அதன் செயலாளர் எஸ்.எச்.லுத்ஃபீ உள்ளிட்டோர் ஒருங்கிணைப்பில், குழுவினர் செய்து வருகின்றனர். |