காயல் ஓமன் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் அதன் தலைவர் K.S.H. அப்துல் காதர் இல்லத்தில் மே 17 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்றது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் பொருளாளர் S.A.C. இஸ்மாயில் சூபி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்!
இறையருளால் எமது காயல் ஓமன் நல மன்றத்தின் 6ஆவது பொதுக்குழுக் கூட்டம் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலையில், கூடியது.
கூட்ட நிகழ்வுகள்:
மன்றத்தின் தலைவர் அவர்களின் மகன் மாணவர் A.K. இஸ்ஹாக் இறைமறை வசனங்களையோதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
கூட்டத்தை நெறிப்படுத்திய உதவி செயலாளர் K. அப்துல் காதர் (Oman Air) மன்றத்தில் புதிதாக இணைந்துள்ள உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்து மேலும் நமதூர் மக்களுக்கு செய்யவேண்டிய நலத்திட்டங்களை குறித்தும், மேலும் நமதூர் பிள்ளைகளின் வேலை வாய்ப்புக்கு உதவி செய்யும்படியும் ஆலோசனை வழங்கினார்.
தலைவர் உரை:
தொடர்ந்து உரையாற்றிய தலைவர் K.S.H. அப்துல் காதர் (General Cables)) புதிதாக இணைந்துள்ள உறுப்பினர்களை வாழ்த்தி வரவேற்றதுடன் அபுதாபி, துபாய், கத்தர், சிங்கப்பூர் காயல் நல மன்றங்களுடன் இணைந்து செயலாற்ற யோசனை இருப்பதையும், அதற்கான அவசியத்தையும் விளக்கிக் கூறினார்.
மேலும் சோஹார், சலாலா, சூர் போன்ற இடங்களில் உள்ள நமது மன்றத்தின் உறுப்பினர்களின் யோசனைகளையும் கேட்டறிந்து அதன்படி முடிவு செய்யலாம் என்றும் கூறினார். தலைவர் அவர்களின் ஆலோசனைப்படி செய்வதற்கு உறுப்பினர்கள் யாவரும் ஒப்புதல் தெரிவித்தனர் மற்றும் அனைத்து நலத்திட்டப் பணிகளும் இறையருளால் இனிதே நடைபெற, மன்ற உறுப்பினர்கள் அனைவரும்- ஒத்துழைக்க வேண்டியது மிகவும் அவசியமென்று அவர் தனதுரையில் கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய மன்றத்தின் பொருளாளர் S.A.C. இஸ்மாயில் சூபி (Oman Flour Mills) வருடாந்திர வரவு செலவு கணக்குகளை தலைவர் முன்னிலையில் சமர்ப்பித்து மன்ற உறுப்பினர்களின் ஒப்புதலையும் பெற்றார். மேலும் சென்ற வருடத்தைப்போல் இந்த வருடமும் கல்வி உதவித் தொகை, மற்றும் மருத்துவ உதவித் தொகைக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை அனுப்புவதற்கு பரிந்துரை செய்தார். அதற்கும் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர்.
மஃரிப் தொழுகைக்கான இடைவேளைக்குப் பின் மீண்டும் தொடர்ந்த அமர்வில், மன்றத்தின் செயலாளர் ஜனாப் ஹமீத் சுலைமான் (Sultan Qaboos University) நலத்திட்டங்களை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுத்து நிறைவேற்றுவது என்பது பற்றி மிக விளக்கமாக எடுத்துரைத்தார்.
அதன் பின்னர் புதிய உறுப்பினர்கள் தமது ஆலோசனைகளையும் வழங்கினர்.
இறுதியாக, உறுப்பினர்கள் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டதுடன் தலைவர் அவர்கள் நன்றியுரையுடன் கூட்டம் முடிவு பெற்றது.
கூட்ட ஏற்பாடுகளை உதவி செயலாளர் K அப்துல் காதர் மிக சிறப்பாக செய்து தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு உறுப்பினர்கள் யாவரும் நன்றி தெரிவித்து கொண்டனர்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே – அல்ஹம்து லில்லாஹ்!
இவ்வாறு, காயல் ஓமன் நல மன்றத்தின் பொருளாளர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
இஸ்மாயில் சூபி,
மஸ்கட், ஓமன். |