காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் பணி நிறைவு பெற்ற - கணிதம் மற்றும் தமிழாசிரியர் ஒய்.எஸ்.எஸ்போன், 19.05.2013 ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மதியம் 03.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74.
அன்னாரின் உடல், மே 20 திங்கட்கிழமை (இன்று) மாலை 04.30 மணியளவில், சுப்பிரமணியபுரம் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நல்லடக்க நிகழ்ச்சியில், அவர் பணியாற்றிய காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆசிரியர்களும், முன்னாள் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நல்லடக்க நிகழ்வின்போது பதிவு செய்யப்பட்ட படக்காட்சிகள்:-
மறைந்த ஆசிரியர் எஸ்போன் அவர்களின் மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினர்:-
காயல்பட்டினம் தீவுத்தெரு - ஸீ கஸ்டம்ஸ் சாலை முனையிலிருந்த எல்.கே.துவக்கப்பள்ளியிலும், பின்னர், தற்போதைய எல்.கே. மேனிலைப்பள்ளி இயங்கி வரும் தாமரைப் பள்ளி வளாகத்தில் இயங்கிய எல்.கே. துவக்கப்பள்ளியிலும், அதனைத் தொடர்ந்து, எல்.கே. மேனிலைப் பள்ளியிலும் மொத்தம் 36 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி, காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்ததும், பணி நிறைவிற்குப் பின், சாயர்புரத்தில் தனது வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள தேவாலயத்தின் சேகர பொருளாளராகவும் சேவையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
தனது பணி நிறைவையொட்டி எல்.கே. மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற வழியனுப்பு விழாவின்போது, பள்ளி தாளாளர் - காலஞ்சென்ற ஹாஜி பி.மஹ்மூத், பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, எல்.கே. துவக்கப் பள்ளியின் முன்னாள் தாளாளரான ‘நாவலர்’ ஹாஜி எல்.எஸ்.இப்றாஹீம் மற்றும் எல்.கே. மேனிலைப் பள்ளியின் சக ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுடன் எடுக்கப்பட்ட குழுப்படம்:-
தகவல்:
மன்னர் பாதுல் அஸ்ஹப்
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
மற்றும்
திரு. சாமுவேல் ராஜ்
[கூடுதல் தகவல்கள் மற்றும் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன @ 19:51 / 20.05.2013] |