அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் கிளை சார்பில், அக்கட்சி தலைமையிலான தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், இம்மாதம் 18ஆம் தேதி இரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
கட்சியின் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் அமலி டி.ராஜன், திருச்செந்தூர் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் ஜி.சேகர், சிறுபான்மைப் பிரிவு நகர செயலாளர் எஸ்.எம்.அப்துல்காதர், நகர அவைத்தலைவர் என்.பி.முத்து, இளந்தளிர் முத்து, எம்.ராமச்சந்திரன், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் ஏ.லுக்மான், ஜெ.அந்தோனி, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.கண்ணன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத் தலைவரின் தலைமையுரையைத் தொடர்ந்து, கட்சி பேச்சாளர் பி.கணேசன், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான கே.ஜமால், இ.எம்.சாமி, ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர் ஆகியோர் உரையாற்றினர்.
கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு பொருளாளர் ஜான் மகேந்திரன், தலைமைக் கழக பேச்சாளர் எம்.கே.ஜமால் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
சிறுபான்மைப் பிரிவு நகர தலைவர் என்.எம்.அஹ்மத் நன்றி கூறினார். இக்கூட்டத்தில், கட்சியினர் மற்றும் நகர பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கூட்ட ஏற்பாடுகளை, கட்சியின் காயல்பட்டினம் நகர செயலாளர் எஸ்.எம்.செய்யது காஸிம் தலைமையில், கட்சியினர் செய்திருந்தனர். |