இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக - அக்கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் துராப்ஷாவுடன் சிங்கப்பூர் சென்றுள்ளார்.
அவர்களுக்கு, சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் 19.05.2013 அன்று வரவேற்பளிக்கப்பட்டது. மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் இல்லத்தில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், பேராசிரியர் காதர் மொகிதீன் மற்றும் துராப்ஷா ஆகியோருக்கு, ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
பின்னர் பேசிய பேராசிரியர் காதர் மொகிதீன், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் நகர்நலச் சேவைகளைப் புகழ்ந்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில், அனைவருக்கும் தேனீர் - சிற்றுண்டி வழங்கி உபசரிக்கப்பட்டது.
தகவல்:
M.M.மொகுதூம் முஹம்மத்
செயலாளர்,
காயல் நல மன்றம், சிங்கப்பூர். |