காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 86ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 10.05.2013 வெள்ளிக்கிழமை (இன்று) இரவு 07.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படும்.
ரஜப் 10ஆம் நாள் (மே 21ஆம் தேதி - நேற்று) நிகழ்ச்சி, காலையில் துவங்கியது. நேற்று ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மவ்லவீ ஏ.எல்.முஹம்மத் அலீ வழங்கினார்.
நன்மை ஏவி, தீமையைத் தடுத்தல், துன்பங்கள் வரும்போது சகித்துக்கொள்ளல் உள்ளிட்ட தலைப்புகளில் அந்த உரை அமைந்திருந்தது.
இன்று, ரஜப் 11ஆம் நாள் (மே 22) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, கேரள மாநிலம் - கோழிக்கோடு ஆரிஃபிய்யா அன்வாரிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.தாஜுத்தீன் மஸ்லஹீ, மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.முஹம்மத் லெப்பை மிஸ்பாஹீ ஆகியோர் வழங்குகின்றனர்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
நடப்பாண்டில் ஒவ்வொரு நாளும் ஆற்றப்படும் உரைகளின் ஒலிப்பதிவுகளையும், முந்தைய ஆண்டுகளில் ஆற்றப்பட்ட உரைகளின் ஒலிப்பதிவுகளையும், http://www.bukhari-shareef.com/eng/audio/6/rajab-bayan-2013.html என்ற இணையதள பக்கத்தில் கேட்கவும், பதிவிறக்கம் செய்துகொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
|