காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில், மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டிகள், இம்மாதம் 12ஆம் தேதி துவங்கி, 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மே 22ஆம் தேதி புதன்கிழமை (இன்று) மாலையில் நடைபெற்ற போட்டியில், சென்னை டான் பாஸ்கோ அணியும், பெங்களூரு எச்.ஏ.எல். அணியும் மோதின.
ஒவ்வொரு நாளும், போட்டி நிறைவடையும் மாலைப் பொழுதின் இறுதி நேரத்தில், வானத்தில் பலவிதமான வர்ண ஜாலங்கள் பொதுமக்களின் கண்களுக்கு விருந்தளித்தவண்ணம் உள்ளன.
இன்றைய போட்டியின் நிறைவு நேரத்தின்போது, மேற்குத் திசையில் ஒருபுறம் சூரியன் மறைந்துகொண்டிருக்க, ஆதே நேரத்தில் கிழக்குத் திசையில் சந்திரன் உதித்திருந்தது.
மேக மூட்டத்திற்கிடையே சூரியன் மறைந்து, அதன் ஒளி மட்டும் மேகங்களின் இடைவெளிகளுக்கிடையே நேர்கோட்டில் வீசும் காட்சியும் வெவ்வேறு நாட்களில் கண்களைக் கவரும்.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |