காயல்பட்டினம் மஸ்ஜித் ஷெய்கு ஸலாஹுத்தீன் என்ற மேலப்பள்ளிவாசல் மையவாடியில், வாலிபர் ஒருவர் மரத்தில் தூக்கிலிட்ட படி பிணமாகத் தொங்கினார்.
இதனைக் கண்ணுற்ற அப்பகுதி பொதுமக்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து உடனடியாக நிகழ்விடம் விரைந்த ஆறுமுகநேரி காவல்துறை துணை ஆய்வாளர் என்.ராஜகுமாரி தலைமையிலான காவல்துறையினர், இறந்த உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வாலிபர், காயல்பட்டினம் சீதக்காதி நகரைச் சேர்ந்தவர் எனவும், அவரது பெயர் ஹமீத், வயது 21, கூலி வேலை செய்து வருபவர் என்றும் அறியப்படுகிறது. தனது தேவைக்காக தன் தாயாரிடம் பெருந்தொகையை பணமாகக் கேட்டதாகவும், கொடுக்க வழியில்லாமல் தாய் மறுத்ததையடுத்து, விரக்தியில் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக, காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |