தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், இம்மாதம் 26ஆம் தேதியன்று, இரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் கோமான் நடுத் தெருவில் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
என்.எம்.முஹம்மத் இப்றாஹீம் தலைமையிலும், பி.எஸ்.அப்துர்ரவூஃப் முன்னிலையிலும் நடைபெறும் இப்பொதுக்கூட்டத்தில், காயல்பட்டினம் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஏ.அப்துல் மஜீத் உமரீ - ”ஈமானின் உறுதி” என்ற தலைப்பிலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளர் கே.எஸ்.அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸீ - “மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றவுள்ளனர்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், அனைவரும் திரளாகக் கலந்துகொள்ளுமாறும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. |