கத்தர் காயல் நல மன்றம் மற்றும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புகள் இணைந்து, வழமை போல இவ்வாண்டும் புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமை, இம்மாதம் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில் நடத்தின.
இம்முகாமில், திருச்சி ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகம் மற்றும் திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர்சிறப்பு சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர், டாக்டர் கோவிந்தராஜன், டாக்டர் சசிப்பிரியா ஆகிய - புற்றுநோய் மருத்துவ சிறப்பு நிபுணர்கள் பங்கேற்று மருந்துவ ஆலோசனைகளை வழங்கினர். காயல்பட்டினத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த 104 பெண்களும், 36 ஆண்களும் என மொத்தம் 140 பேர் இம்முகாமில் பங்கேற்று புற்றுநோய் பரிசோதனை செய்துகொண்டனர்.
இம்முகாமில், மருத்துவ நிபுணர்களுக்கு உதவியாக, மருத்துவப் படிப்பு மாணவர்களான சுல்தான் ராஷித், பீர் முஹம்மத், பி.பார்ம். மாணவர்களான ‘ஜாஸ் பெர்ஃப்யூம்ஸ்’ ஜெ.ஏ.அப்துல் ஹலீம், ஹாஃபிழ் கே.எம்.முத்து இஸ்மாஈல் ஆகியோர் மருத்துவர்களுக்கு துணைப் பணியாற்றினர்.
முகாம் நிறைவில், மருத்துவ நிபுணர்கள் மற்றும் குழுவினருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
முகாம் ஏற்பாடுகளை, கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் கே.எம்.எஸ்.மீரான் தலைமையில், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் உள்ளூர் பிரதிநிதி எஸ்.அப்துல் வாஹித், இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், கத்தர் காயல் நல மன்ற உள்ளூர் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ், கத்தர் காயல் நல மன்ற உறுப்பினர் குடாக் புகாரீ, ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, காதர் சுலைமான், எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன், கே.எம்.டி.மருத்துவமனை மேலாளர் அப்துல் லத்தீஃப் ஆகியோர் செய்திருந்தனர்.
பெண்கள் பகுதியில், இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஏற்பாட்டில் பெண் தன்னார்வலர்கள் ஏற்பாட்டுப் பணிகளைச் செய்தனர்.
மாணவர்கள் அதாவுர்ரஹ்மான், மர்வான், வி.எம்.ஏ.சுலைமான், சுல்தான் ஆகியோர், முகாமில் தன்னார்வலர்களாகக் கடமையாற்றினர். ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், ‘முர்ஷித் ஜெராக்ஸ்’ கே.முஹ்ஸின், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, கத்தர் காயல் நல மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஹாஜி சொளுக்கு எம்.இ.செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற சேம்ஸா, கே.எம்.டி.சுலைமான் ஆகியோர் ஏற்பாட்டுப் பணிகளுக்குத் துணை நின்றனர். சாளை பாதர் ஆகியோர் முகாம் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.
முகாம் நிறைவுற்ற பின்னர், மருத்துவ நிபுணர்கள் டாக்டர் கோவிந்தராஜன், டாக்டர் சசிப்ரியா இணைந்து தெரிவித்ததாவது:-
மொத்தம் 140 பேர் இந்த முகாமில் பங்கேற்று மருத்துவ ஆலோசனை பெற்றுள்ளனர். ஆண்கள் சிலருக்கு சில பற்கள் கூர்மையாகவும், சிலருக்கு அடிக்கடி தாடையில் கடிபடும் வகையிலும் அமைந்திருந்தது… அவற்றை சரி செய்திட அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
பெண்களுள் ஒருவருக்கு புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருப்பதும், இன்னும் இருவருக்கு அதன் அடையாளங்கள் தென்படுவதும் கண்டறியப்பட்டது.
பொதுவாக புற்றுநோய் என்பது முற்றிய பிறகே தன்னை அடையாளங்காட்டும். அதற்குப் பிறகு சிசிக்சை செய்வதால் பெரிய அளவில் பயனெதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. அதே நேரத்தில், இதுபோன்ற முகாம்களின் மூலம் புற்றுநோயை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், மிக இலகுவாக சிகிச்சை மூலம் சரிசெய்திட இயலும்.
அந்த அடிப்படையில், இம்முகாமில் பங்கேற்று - புற்றுநோய் இருப்பதாகவும், அதன் அறிகுறிகளும் கண்டறியப்பட்டவர்களுக்கு, தகுந்த பரிசோதனைகள் மூலம் அவற்றை உறுதிப்படுத்திய பின்னர், எளிய சிகிச்சை மூலம் இலகுவாகக் குணப்படுத்த இயலும். இதனால் அவர்களின் உயிரும், உடமைகளும் பாதுகாக்கப்படுகிறது.
இவ்வாறு, புற்றுநோய் மருத்துவ நிபுணர்களான டாக்டர் கோவிந்தராஜன், டாக்டர் சசிப்ரியா ஆகியோர் தெரிவித்தனர்.
முகாமை நடத்திய குழுவினர் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கு, தாய்லாந்து காயல் நல மன்ற செயலாளரான ‘கரூர் ட்ரேடர்ஸ்’ ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் ஏற்பாட்டில், ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ குடும்பத்தார் மதிய உணவு விருந்தளித்தனர்.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |