6 மாதத்தில் Synthetic Iron Oxide Plant தொழிற்சாலையை நிறுவ மத்திய அரசின் நிபுணர்கள் குழு (Experts Appraisal Committee) - DCW தொழிற்சாலைக்கு கெடு விதித்துள்ளது. இது குறித்து காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION - KEPA) சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
காயல்பட்டினம் நகராட்சியின் வடபுறத்தில் அமைந்துள்ள DCW தொழிற்சாலை 2007 ஆம் ஆண்டு - மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் - சுற்றுச்சூழல் ஒப்புதலை [Environmental Clearance] (ஜூன் 7, 2007 தேதியிட்ட J-11011/426/2006-IA –II எண் ஆணை மூலம்) கீழ்க்காணும் பணிகளுக்கு பெற்றது.
1. காஸ்டிக் சோடா உற்பத்தியை Mercury Cell முறையில் இருந்து Membrane Cell முறைக்கு மாற்றிட
2. 50 MW கொள்ளளவில் - நிலக்கரி கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்ய
3. Ilmenite தொழிற்சாலையின் கழிவினை மூலமாக கொண்டு Synthetic Iron Oxide Plant நிறுவ
இம்மூன்று பணிகளில் - காஸ்டிக் சோடா உற்பத்தியை Mercury Cell முறையில் இருந்து Membrane Cell முறைக்கு மாற்றிடும் பணியினை 2007 ஆம் ஆண்டே இந்நிறுவனம் நிறைவு செய்ததது.
மேலும் - 50 MW கொள்ளளவில் - நிலக்கரி கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யும் பணியை 2008 ஆம் ஆண்டு இந்நிறுவனம் நிறைவு செய்ததது. சில மாதங்கள் கழித்து இந்நிறுவனம் கூடுதலாக 8 MW கொள்ளளவு (தற்போதைய கொள்ளளவு 58 MW) உற்பத்தியை பெருக்கியது.
மத்திய அமைச்சகம் மூலம் வழங்கப்படும் EC - பொதுவாக 5 ஆண்டுகள் கால அவகாசம் கொண்டவை. அந்த காலக்கட்டத்திற்குள் - ஒப்புதல் ஆணையில் (EC) குறிப்பிடப்பட்டுள்ள பணிகளை நிறைவு செய்யவேண்டும்.
அவ்வாறு பணிகளை ஐந்தாண்டுக்குள் நிறைவு செய்யவில்லை என்றால் - மத்திய அமைச்சகத்திடம் இருந்து மீண்டும் கால அவகாசம் நீட்டிக்க கோரி விண்ணப்பம் செய்யவேண்டும்.
2007 ஆம் ஆண்டு ஒப்புதல் பெற்ற 3 பணிகளில், இரு பணிகளை மட்டும் நிறைவு செய்த DCW நிறுவனம், Ilmenite தொழிற்சாலையின் கழிவினை மூலமாக கொண்டு Synthetic Iron Oxide Plant நிறுவும் பணியினை நிறைவு செய்யவில்லை. மத்திய அமைச்சகம் வழங்கிய ஐந்தாண்டு கால அவகாசம் 2012 ஆம் ஆண்டு நிறைவுற்றிருந்ததால், கால அவகாசத்தை மேலும் ஐந்தாண்டு நீட்டிக்க DCW நிறுவனம் மத்திய அமைச்சகத்திடம் விண்ணப்பம் சமர்ப்பித்திருந்தது. அவ்விண்ணப்பம் குறித்த நிபுணர் குழுவின் முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
DCW நிறுவனத்தின் விண்ணப்பம் ஏப்ரல் 4, 2013 அன்று புது டில்லியில் உள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் தொழிற்சாலைகளுக்கான நிபுணர்கள் குழுவிடம் பரிசீலனைக்கு வந்தது. அந்த விண்ணப்பத்தில் DCW நிறுவனம் - Synthetic Iron Oxide Plant நிறுவ, Rockwood Mineral Inc என்ற அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து, மாதிரி முயற்சிகள் செய்யப்பட்டதாகவும், டிசம்பர் 2012 முடிய கட்டுமான பணிகள் (Civil Works) 60 சதவீதம் நிறைவுற்றுவிட்டதாகவும், இயந்திரப் பணிகள் (Mechanical Works) - 40 - 50% நிறைவுற்றுள்ளதாகவும், ஆகவே - அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் ஒப்புதலை மேலும் ஐந்தாண்டு நீட்டிக்க கோரியும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்தொழிற்சாலை நிறுவப்பட்டால், சுற்றுச்சூழல் மாசு கட்டுப்படுத்தப்படும் என்றுக்கூறி DCW நிறுவனத்தின் கோரிக்கையை பரிசீலனை செய்த நிபுணர்கள் குழு, ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்ட ஆறு மாதத்திற்குள் - Synthetic Iron Oxide தொழிற்சாலையை, DCW நிறுவனம் துவக்க வேண்டும் என்றும், அவ்வாறு துவக்கப்பட்டப்பின் - அதனை ஆய்வு செய்து பெங்களூரில் உள்ள அமைச்சகத்தின் மண்டல அலுவலகத்தில் இருந்தும், தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்தும் சான்றிதழ்கள் பெற்று குழுவின் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
இது சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி குறிப்புகள் ...
7.4.1 Expansion for 283 TPD Membrane Cell (Conversion from Mercury Cell) Caustic Soda Plant with 125 TPD Iron Oxide Plant and Installation of 2 x25 MW captive Power Plant at Sahupuram Tirchendur Tuticorin, TN by M/s DCW- extension of the validity of EC.
MoEF vide letter no. J-11011/426/2006-IA –II dated 7th June 2007 has issued environmental clearance for expansion for 283 TPD Membrane Cell (Conversion from Mercury Cell) Caustic Soda Plant with 125 TPD Iron Oxide Plant and Installation of 2 x25 MW captive Power Plant at Sahupuram Tirchendur Tuticorin, TN.
Project proponent informed that project regarding conversion of existing mercury cell based caustic soda manufacturing cell based plant was already implemented and the plant was commissioned in 2007. Consent for establish and consent to operate were obtained from TNPCB vide consent order no. 4001 under Air Act & 4086 under Water Act dated 03.09.2007. Coal based cogeneration power plant (2x25 MW) was commissioned in the year 2008 and consent to operate was granted by TNPCB vide Consent Order No. 4144 under Air Act & 4200 under Water Act dated 17.11.2007. Now, project proponent informed that regarding iron oxide plant, unit has undertaken up bench scale and pilot studies in association with M/s Rockwood Mineral Inc., USA and detailed engineering was completed during October, 2012. The site construction activities were commenced during the month of
July 2011 itself, synchronizing with the section wise completion of detailed engineering. Presently about 60 % of the Civil works and about 45-50% of the mechanical works were completed as of December, 2012. Therefore, project proponent has requested to extend the validity of the environmental clearance for further period of five years.
The Committee noted that the Iron Oxide plant is a pollution abatement project (usage of leach liquor for the production of Iron Oxide pigment and CaCl2 granule as by product) and known as Synthetic Iron Oxide Plant, which will create value added
products from the waste generated for the existing facility. The Committee desired that the Unit should make full effort to implement this project and the plant should be commissioned within a period of six months from the date of issue of letter.
Compliance report on the commissioning status from the Ministry’s Regional Office, Bangalore and TNPCB shall be obtained after six months. Compliance Status may be put up before the Committee.
மத்திய அமைச்சகம் 2007 ஆம் ஆண்டு DCW நிறுவனத்திற்கு வழங்கிய சுற்றுச்சூழல் ஒப்புதல் கடிதத்தில் - இந்நிறுவனம் கழிவுகள் ஏதும் அருகில் உள்ள நீராதாரங்களில் கலக்கக்கூடாது ("Zero Discharge Unit") என தெரிவித்திருந்தது. ஆனால் - அவ்விதிமுறையை இந்நிறுவனம் பின்ப்பற்றாமல் செயல்புரிந்து வருகிறது எனவும், DCW தொழிற்சாலையின் கழிவுகளினால் சுற்றுச்சூழல் மாசுப்பட்டு வருகிறது எனவும், புற்று நோய்கள் உட்பட பல நோய்களுக்கு இந்நிறுவனம் காரணியாக இருக்கலாம் என்றும், இந்நிறுவனம் அரசாங்க விதிகளை மீறி செயல்பட்டு வருவதாகவும் புகார் மனுக்கள் Cancer Fact Finding Committee மூலமாக மத்திய - மாநில அரசுகளுக்கு காயல்பட்டினம் மக்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது. 2011 இல் CFFC, மூலம் தயாரிக்கப்பட்ட மனு - காயல்பட்டினதிலும், உலகெங்கும் உள்ள காயலர்களிடமும் கையெழுத்து பெறப்பட்டு, மத்திய - மாநில அரசுகளிடம் வழங்கப்பட்டது நினைவிருக்கலாம்.
இந்நிறுவனம் தொடர்ந்து கடலில் கழிவினை கலந்துவருவதை கண்டித்து - கடந்த நவம்பர் மாதம் காயல்பட்டினத்தில் முழு அடைப்பும், ஆர்ப்பாட்டமும் - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சென்னையில் காயலர்கள் பெருந்திரளாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் கோரிக்கை மனுவும் சமர்ப்பித்தினர். அதன் விளைவாக டிசம்பர் மாத இறுதியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொழிற்சாலையை சுற்றி கழிவு நீர் மற்றும் மணல் மாதிரிகளை சோதனை செய்ய எடுத்துச்சென்றது.
சோதனை முடிவுகளை - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றுள்ளது. முடிவுகள் - இந்நிறுவனம் சுற்றுச்சூழலை, மாசுபடுத்தும் விதமாக கழிவுகளை கலப்பதை ஊர்ஜிதம் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னரே பல திட்டங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி பெற்ற இந்நிறுவனம், அந்த நிபந்தனைகள்படி செயல்புரியாத காரணத்தால், இந்நிறுவனம் புதிதாக முன்வைத்துள்ள திட்டங்களுக்கு (PVC தொழிற்சாலை விரிவாக்கம், TCE தொழிற்சாலை விரிவாக்கம், CPVC தொழிற்சாலை புதிதாக நிறுவுதல், நிலக்கரி மூலம் மின் உற்பத்தியை மேலும் 50 MW உயர்த்துதல்) அனுமதி வழங்கக்கூடாது என்றும் காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு வழியுறுத்தி வருகிறது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|