சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமான பூவுலகின் நண்பர்கள் - விதையிலிருந்தே மரம் ... என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் இதழியல், எழுத்துக்கான பயிற்சிப் பட்டறை நடத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சி இன்று துவங்குகிறது. மே 24, 25, 26 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய மூன்று தினங்களில் பாபநாசம் அருகே (நெடுஞ்செழியன் அரங்கு [சாலோம் மண்டபம்], டாணா விலக்கு) பொதிகை மலை அடிவாரத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தங்கும் இடம், உணவு ஆகிய வகைக்களுக்கு உட்பட பதிவு கட்டணம் ரூபாய் 1000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பங்குபெறுவோருக்கு வழங்கப்படும் மூன்று நாட்களுக்கான பாரம்பரிய உணவுப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
உணவு பட்டியலினை அன்னம் - புளியங்குடி இயற்கை விவசாயிகள் சங்கம் தயாரித்துள்ளது.
:: முதல் நாள்
24-05-2013 (வெள்ளி)
காலை 7 மணிக்கு
பதநீர் / கருப்பட்டிக்காபி
தினசரி காலை
பதநீர்
காலை உணவு
வரகரசி பொங்கல்
காலை 11 மணிக்கு
சுக்கு காபி, குதிரை வாலி பிஸ்கட்
மதியம் உணவு
சோறு, சாம்பார் மூன்று நாளைக்கும் மூன்று பாரம்பரிய அரிசி (தூய மல்லி, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா)
மாலை
கடுக்காய் காபி
இரவு
சிறுதானிய உணவு (மூன்று நாளைக்கும் - கோதுமை, கம்பு, சோளம்)
:: இரண்டாம் நாள்
25-05-2013 (சனி)
காலை உணவு
சோளதோசை, புளிச்சட்னி
மதிய உணவு
சோறு, மீன்குழம்பு / சுண்டை வற்றல் குழம்பு
மாலை
காணிக்குடியிருப்பில் உணவு, இட்லி, கொண்டைக்கடலை
காணிக்குடியிருப்பில் தங்கல்
:: மூன்றாம் நாள்
26-05-2013 (ஞாயிறு)
காலை உணவு
காணிப்பழங்குடியினர் வழங்கும் உணவு - தேனும் தினைமாவும், மரவள்ளிக்கிழங்கு, குச்சி மிளகாய்ச்சட்னி
மதிய உணவு
உளுந்தஞ்சோறு, கோழிக்கறி / மாட்டுக்கறி
மாலை உணவு
கருப்பட்டிக்காபி
====================================================
தொடர்புக்கு, பணம் செலுத்த
ராஜாராம் - 98943 10997
பிற தொடர்புகளுக்கு ---
[திருநெல்வேலி]
காஞ்சனை மணி - 94430 87072
சதீஷ் - 99425 05394
நம்பி - 90924 81997
[பாபனாசம்]
மருத்துவர் மைக்கேல் -98421 66097
தகவல்:
சாளை பஷீர் |