இம்மாதம் 23ஆம் தேதி வியாழக்கிழமையன்று இரவு 08.00 மணிக்கு, காயல்பட்டினத்தில், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சார்பில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
ஹாஜி எம்.ஏ.இஸ்ஸத்தீன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் டி.எஸ்.முஹம்மத் ஜியாத் இறைமறை வசனங்களையோதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நகர தலைவரும், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினருமான ஹாஜி ஏ.லுக்மான் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், “முஸ்லிம்களின் இன்றைய கல்வி நிலை” எனும் தலைப்பில், இஸ்லாமிய மாணவர் அமைப்பு (எஸ்.ஐ.ஓ.) மாநில தலைவர் அபூதாஹிர் உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, “முஸ்லிம்களின் இன்றைய பிரச்சினைகளும், தீர்வுகளும்” எனும் தலைப்பில், ‘மானுட வசந்தம்’ நிகழ்ச்சி நடத்துனரும், இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் துணைத்தலைவரும், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
உரையின் நிறைவில், பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அவர் விளக்கமளித்தார்.
இக்கூட்டத்தில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
கூட்ட ஏற்பாடுகளை, நகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் செயலாளர் எஸ்.எச்.லுத்ஃபீ, ஹபீபுர்ரஹ்மான் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
கள உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |