வி-யுனைட்டெட் கே.பி.எல். க்ரிக்கெட் சுற்றுப்போட்டிகள் இம்மாதம் 22ஆம் தேதி புதன்கிழமை (நாளை) துவங்குகிறது. இதுகுறித்து, சுற்றுப்போட்டி ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
விளையாட்டுத் துறையில் காயலர்களை ஒருங்கிணைக்கும் நோக்குடன் இயங்கி வரும் வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பாக, காயல்பட்டினம் நகரின் விளையாட்டு ஆர்வலர்களின் நல்லாதரவோடும், காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.), ஐக்கிய விளையாட்டு சங்கம் (யு.எஸ்.ஸி.) ஆகியவற்றின் ஒத்துழைப்புகளோடும், காயல் ப்ரீமியர் லீக் கால்பந்து மற்றும் க்ரிக்கெட் போட்டிகள் கடந்த 3 ஆண்டு காலமாக நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாண்டு, வி-யுனைட்டெட் கே.பி.எல். க்ரிக்கெட் சுற்றுப்போட்டிகள், இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 22ஆம் தேதி புதன்கிழமை (நாளை) துவங்கி, இம்மாதம் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை, காயல்பட்டினம் கே.எஸ்.ஸி. மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இச்சுற்றுப்போட்டியில், ஃபைனல் சேலஞ்சர்ஸ், காயல் யுனைட்டெட், காயல் ராக்கர்ஸ், ஃபிஸ்கி பாய்ஸ், க்ரீனிஷ் கவுண்ட்டி, ஃபயர் ஸ்ட்ரைக்கர்ஸ், காலரி பேர்ட்ஸ், வாவு வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்துகொண்டு விளையாடவுள்ளன. துவக்கச் சுற்று லீக் முறையில் நடைபெறவுள்ளது.
நாளை நடைபெறும் துவக்கப் போட்டியில், ஃபைனல் சேலஞ்சர்ஸ் அணியும், காயல் யுனைட்டெட் அணியும் களம் காணவுள்ளன.
வி-யுனைட்டெட் கே.பி.எல். க்ரிக்கெட் சுற்றுப்போட்டியில், புதிய அறிமுகமாக - ஒவ்வொரு போட்டியிலும் அதிக ஓட்டங்களைப் பெறும் வீரருக்கு ஆரஞ்ச் நிறத்திலும், அதிக வீரர்களை ஆட்டமிழக்கச் செய்யும் வீரருக்கு நீல நிறத்திலும் விளையாட்டு தொப்பிகள் வழங்கப்படவுள்ளது. அத்துடன், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணிகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றுக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளது.
விறுவிப்பான இப்போட்டிகளைக் காண, க்ரிக்கெட் விளையாட்டு ஆர்வலர்களை எமது வி-யுனைட்டெட் கே.பி.எல்.சுற்றுப்போட்டிக் குழு அன்புடன் அழைக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.ஜஹாங்கீர் |