காயல்பட்டினம் – பூந்தோட்டம் பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு முகாம் இம்மாதம் 18ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்களால் முறையிடப்பட்டதையடுத்து நடத்தப்பட்ட இம்முகாமை, காயாமொழி ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் ஆர்.சுப்பிரமணியன் வழிநடத்தினார்.
கொசு முட்டைகள் மற்றும் புழுக்களை அழித்து, கொசுக்கள் உற்பத்தியைத் தடுத்திட, அப்பகுதியிலுள்ள தண்ணீர் தொட்டிகள் மற்றும் கிணறுகளில் அபேட் மருந்து தெளிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, பயன்பாடற்ற நிலையிலிருந்த பாத்திரங்கள் மற்றும் டயர் போன்ற பொருட்கள் அகற்றப்பட்டு, அவ்விடங்கள் சுத்தம் செய்யப்பட்டது.
பின்னர், கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுத்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, வட்டார சுகாதாரத் துறை மருத்துவ அலுவலர் மதன், அப்பகுதி பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தேவையின்றி தண்ணீர் தேங்கும் பொருட்களை அவ்வப்போது அகற்றிடுமாறும், கொசுக்கடியிலிருந்து தவிர்ந்துகொள்ள குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் கொசு வலைக்குள் உறங்குமாறும், உடல் முழுவதையும் மூடும் ஆடைகளை உடுத்திக்கொண்டு உறங்குமாறும், அந்தந்தப் பகுதிகளில் அரசால் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட பகுதி மக்கள் முழு ஒத்துழைப்பளிக்குமாறும் அவர் அறிவுரை வழங்கினார்.
இம்முகாமை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் மேற்பார்வையிட்டார்.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |