செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. அரசின் ஈராண்டு சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி 18.5.2013 மற்றும் 19.5.2013 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசு செய்திக்குறிப்பு வருமாறு:
செய்தி-மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசின் ஈராண்டு சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி 18.5.2013 மற்றும் 19.5.2013 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இப்புகைபடக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்கள் திறந்து வைக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிறதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.
``சாதனை புரிந்த ஈராண்டு
சரித்திரம் பேசும் பல்லாண்டு’’
என்ற தலைப்பின் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் பங்கேற்ற அரசு விழாக்கள், கலந்துக்கொண்ட நிகழ்ச்சிகள், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், நாட்டுக்கு உழைத்த தலைவர்களுடன் உள்ள புகைப்படங்கள் போன்ற அரிய புகைப்படங்கள் இந்த அரசின் சாதனை விளக்கும் புகைப்படக் கண்காட்சியில் இடம் பெறும்.
அரசின் ஈராண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை - 9. |