செய்தி: பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் இவ்வாண்டு மாநில அளவில் முதல் இடம் பெற்ற இரு மாணவர்கள் காயல்பட்டினம் வருகின்றனர்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byVilack SMA (Siqhiao)[19 May 2013] IP: 183.*.*.* China | Comment Reference Number: 27449
ஒவ்வொரு வருடமும் நடக்கும் நிகழ்ச்சிதான் . முதல் மாணவர் என்ற அந்த வெளியூர்காரர் வருவார் . ஆலோசனைகள் சொல்வார் . ஆனால் நமக்குமட்டும் , " முதல் மாணவர் " என்ற கனவு எட்டாக்கனிதான் .
நமதூருக்கு வரும் அந்த " முதல் மாணவர் " இப்படி பேசுவார்,
"நான் இரண்டு வருடமாக TV பார்கவில்லை . எங்கள் வீட்டில் TV யும் இல்லை . குடும்ப விழாக்களுக்கும் , பொது நிகழ்சிகள் , விழாக்களுக்கு நாங்கள் செல்வதும் இல்லை , எங்கள் பெற்றோர்கள் எங்களை அழைத்து செல்வதும் இல்லை . எங்கள் வீட்டிலும் , பள்ளியிலும் நாங்கள் படிப்பதர்கேற்ற அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தி தந்தார்கள் . பெற்றோர்கள் எங்களது படிப்பிற்காக தங்களது பெரும்பாலான நேரங்களை எங்களுக்காக ஒதுக்கினார்கள் . இவ்வாறான சூழ்நிலையில் படித்து , நாங்கள் முதல் மாணவராக வந்திருக்கிறோம் என்பார்கள் "
நமதூரில் இவையெல்லாம் சாத்தியமா ?
சில சமயங்களில் , நமதூர் பள்ளி மாணவர்கள் மாவட்டத்தில் முதல் மாணவராக வருகிறார் . அந்த வகையில் நாம் சற்று ஆறுதலும் , சந்தோசமும் அடைய வேண்டியதுதான் . ஒருமுறை LK பள்ளி மாணவர் , இந்த முறை நமதூரின் கமலாவதி பள்ளி மாணவி .
"சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவரை " என்ற நிகழ்ச்சியை நடத்துவதைவிட , " சிந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவரை உருவாக்க " என்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தால் , மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross