செய்தி: பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் இவ்வாண்டு மாநில அளவில் முதல் இடம் பெற்ற இரு மாணவர்கள் காயல்பட்டினம் வருகின்றனர்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bySalih (Chennai)[19 May 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 27463
கல்வியில் தேர்ந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க பல அம்சங்கள் கூடி அமையவேண்டும். போதிய வசதிகள் கொண்ட நல்ல பள்ளிக்கூடம், திறமைவாய்ந்த ஆசிரியர்கள், ஆர்வம் கொண்ட மாணவர்கள், அரவணைத்து வழிநடத்தும் பெற்றோர்கள், ஊக்குவிக்கும் பொது நல அமைப்புகள். இவை அனைத்தும் கூடி வரும் போதே - ஒரு சமுதாயம், ஒட்டு மொத்தமாக, கல்வியில் வெற்றிகளை காணும். மேலே குறிப்பிடப்பட்ட பல அம்சங்களில் ஓர் அம்சம்தான் சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவர்களை நிகழ்ச்சி. இந்த ஒரு நிகழ்ச்சி மூலம் முழு மாற்றத்தையும் கொண்டு வரமுடியும் என்று இந்த நிகழ்ச்சியின் ஏற்ப்பாட்டாளர்கள் நினைக்கவும் இல்லை, பிறரிடம் அவ்வாறு எதிர்ப்பார்ப்பு இருப்பின் அது தவறு.
மாநிலத்தின் முதல் மதிப்பெண்கள் பெறும் அனைத்து மாணவர்களும் நாமக்கல் - மாதிரி பள்ளிக்கூடங்களை சார்ந்தவர்களும் அல்ல. இவ்வாண்டு - மாநிலத்தின் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் - மேலூர், செங்கல்பட்டு, ஆவடி, பொன்னேரி போன்ற ஊர்களில் இருந்தும் வந்துள்ளனர். முதல் இடம் பெற்ற ஜெயசூரியா நாமக்கல்லில் படித்தாலும், தினசரி வீட்டில் இருந்து சென்று படித்தவர்.
காயல்பட்டினத்தில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் - நாமக்கல்லில் படிக்காத (எந்த பள்ளிக்கூடத்திலும் ஹாஸ்டலில் தங்கி படிக்காத) பல மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களில் தினசரி விளையாட்டுக்களில் பங்கேற்றவர்களும் உண்டு. பொழுதுபோக்கிற்கும் சரி, படிப்பிற்கும் சரி போதிய அளவில் நேரங்களை ஒதுக்கியவர்களும் உண்டு.
கடந்த 7 ஆண்டுகளில் மாநிலத்தின் முதல் மூன்று இடங்களை பெற்ற ஏறத்தாழ 50 மாணவர்கள் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் ToppersTalk.com இணையதளத்தில் உள்ளது. அவைகளை படித்தால், பல விதமான மாணவர்களை காணலாம். ஏழை, பணக்காரன், எப்போதும் படிப்பவன், பொழுதுபோக்குக்கும் நேரம் ஒதுக்குபவன் - இவ்வாறு பல விதங்கள்.
சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவரை நிகழ்ச்சியின் நோக்கம் - மாணவர்களை ஊக்குவிப்பது தான், ஒரு குறிப்பிட்ட படிப்பு முறையை பரிந்துரைப்பது அல்ல.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாநிலத்தின் முதல் மாணவருக்கு பரிசாக - கடந்த சில ஆண்டுகளாக - ரூபாய் 10,000 வழங்கப்படுகிறது. அது தவிர - அவர் பெற்றோர்/உறவினருடன் வந்து செல்ல AC ரயில் டிக்கெட், தங்கும் செலவு ஆகியவையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் பொறுப்பு ஏற்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் நோக்கப்படி - காயல் மாணவர் சாதனை புரியும்போது மட்டுமே 75,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாநிலத்தின் முதல் மாணவருக்கு - இந்த நிகழ்ச்சியின் குறிக்கோள்கள் எடுத்துக்கூறப்பட்டே, அழைத்தும் வரப்படுகிறார். நகரில் சாதனை மதிப்பெண்ணை பெறும் மாணவருக்கு வழங்கப்படும் 75,000 ரூபாய் ரொக்கப்பரிசு, விருந்தினருக்கு முற்கூட்டியே தெரிவிக்கப்பட்டே அழைப்பு விடப்படுகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross