Re:...மானுட வசந்தம் posted bymackie noohuthambi (colombo)[20 May 2013] IP: 203.*.*.* Sri Lanka | Comment Reference Number: 27475
ஆடும் மயிலையும் பாடும் குயிலையும் அதன் அதன் போக்கில் விட்டு ஆடவும் பாடவும் விட்டு ரசிக்க வேண்டும்.
மானுட வசந்தம் மருத்துவர் ஹபீப் முஹம்மது அவர்களை நான்கு சுவர்களுக்குள் பேசவைத்து அவரின் சிறகை ஒடித்து அவர் பேச்சின் ரசனையை அனுபவிக்க ஒரு சிலர் பேர் மட்டும் கூடியிருக்கும் கூட்டை தேர்ந்தெடுத்து பெரும் திரளான மக்கள் கூடியிருந்தார்கள் என்று விளம்பரம் செய்வது ஏற்புடையது அல்ல.
இந்தியாவின் ஒரு தலை சிறந்த இயக்கங்களில் ஒன்று அதன் தலை சிறந்த பேச்சாளரை தமிழகத்தின் ஒரு தலை சிறந்த இஸ்லாமிய தலை நகரில் பேச அழைப்பவர்கள் கொஞ்சம் மாற்றி யோசியுங்கள். கேட்டால் பணம் இல்லை என்று சொல்கிறார்களா. வேடிக்கையாகவும் விநோதமாகாவும் வேதனையாகவும் இருக்கிறது.
ஒரு பேச்சாளரை அவர் திறமை அறிந்து அவர் சார்ந்து இருந்த கட்சியில் இருந்து தனது கட்சிக்கு அழைத்து வந்து ஒரு விலை உயர்ந்த காரையும் கொடுத்து, துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவியையும் கொடுத்து கௌரவிக்கும் இந்த கால கட்டத்தில் ஜமாத்தே இஸ்லாமி இயக்கம் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருப்பது என் போன்றவர்களுக்கு உடன்பாடாக இல்லை.
மாற்றி யோசியுங்கள், மாற்றம் ஒன்றுதான் உலகில் என்றும் மாறாதது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross