செய்தி: கத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை அமைப்புகள் இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம்! சுமார் 140 பயனாளிகள் மருத்துவ ஆலோசனை பெற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பயன்பெற்றவர் கூறியது... posted byS.K.Salih (Kayalpatnam)[23 May 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27559
இந்த முகாமில் புற்றுநோய் அறிகுறிகள் இருப்பதாகக் கண்டறியப்படுவோருக்கு, மருத்துவமனையிலிருந்தே தொடர்புகொண்டு, அடுத்தகட்ட சிகிச்சைக்கு அறிவுரை வழங்குகின்றனர். கட்டுப்படுவோர் பெற்ற அறிவுரையின்படி சிகிச்சை பெற்று இறையருளால் நலம் பெற்றுச் செல்கின்றனர்.
புற்றுநோய் அடையாளங்கள் இருப்பதாகக் கண்டறியப்படுவோர் யாரென முகாம் ஏற்பாட்டுப் பணிகளைச் செய்வோருக்குக் கூட தெரியப்படுத்துவதில்லை. அவ்வளவுக்கு ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
எனினும், இந்த முகாமின்போது, எனக்கு மிகவும் அறிமுகப்பட்ட ஒரு சகோதரர் கூறுகையில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இதே போன்ற முகாமில் தன் காக்கா மகனுக்கு (அல்லது மகளுக்கு) அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், மருத்துவரின் அறிவுரையின்படி சிகிச்சை பெற்றதால், தற்போது புற்றுநோய் அடையாளமே இன்றி இறையருளால் நல்ல உடல் நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.
இதுதான் இந்த முகாம் மூலம் கிடைக்கப்பெறும் பலன்கள். ஜியா காக்காவின் கேள்விக்கு இந்தக் கருத்துப் பதிவின் மூலம் விடை கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross