DCW கவனத்திற்கு posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[29 May 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27607
ஒரு நாட்டிற்கோ, ஒரு ஊருக்கோ ஒருபெரிய தொழிற்சாலை அமையப்பெற்று அதுஅந்த நாட்டின் வளர்ச்சிக்கும்,
அது அமைந்துள்ள ஊருக்கும் நன்மை கிடைக்க காரணியாக இருக்குமேயானால், இருகரம் நீட்டி வரவேற்ப்போம், அதன்வளர்ச்சிக்குவேண்டிய ஒத்துழைப்பையும் செய்வோம் அதில் இருகருத்துக்களுக்கு இடமே இல்லை!
இன்னும் சொல்ல வந்தால் காயலூரார், வெளியுரார் என்ற வேறுபாடில்லாமல் வந்தாரை வாழ வைக்கும் "பெருந்தன்மை பூங்காவால்" ஆனா பரம்பரை புகழ்பாடும் ஊர்தான் எங்கள் காயல்பதி!
அப்படிப்பட்ட ஊரில் ஆயிரக்கணக்கானோர்களுக்கு
வேலை வாய்ப்பு கிடைத்திடும் ஒரு பெரிய நிர்வாகத்தின்
சுகாதார செயல்பாட்டுக்கோளாறினால், அதிலிருந்து வரும் கழிவால் அருகிலுள்ள அனைத்து பகுதிகளும்,குறிப்பாக காயல் ஊரும் பாதிப்புக்குள்ளாவது மட்டுமல்ல, உயிர்கொல்லி காரணியாகவும் அமைகிறது என்பதற்குறிய ஆயிரம் ஆதாரங்களை அள்ளி கொடுத்தும்,அதற்க்கு அணுவளவும் அசைந்து கொடுக்காமல், அனைத்தையும் அசட்டை செய்யும் இந்த நிர்வாகம் தான் நீக்கப்பட வேண்டும் என்று சொல்கிறோமேயல்லாமல்,
ஒருபெரிய தொழிற்கூடத்தை குழிதோண்டி புதைக்க வேண்டுமென்ற பொறாமை குணமடங்கிய காழ்ப்புணர்ச்சி எந்த ஒரு காயல் குடிமகனுக்கும் கிஞ்சித்தும் கிடையாது என்பதை அந்த நிர்வாகம் தெரிந்து கொள்ளவேண்டும்!
இன்னும் காலம் கடந்துவிடவில்லை ,
உங்கள் நிர்வாகத்திற்கெதிரான அரசு உத்தரவு
அடுக்கடுக்காக வருகிறது, அதை மனசாட்சியுடன் முறையாக பரிசீலனைசெய்து ஒழுங்குபடுத்தி, சுகாதாரத்திற்குறிய உத்தரவாதத்தை நூறு சதவீதம் தந்ததோடு மட்டுமல்லாமல் அதை செயல்முறையிலும் நிரூபிப்பீர்களேயானால்,
எங்கள் நெஞ்சம் குளிர வரவேற்று,உங்களுக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறோம்!
எங்களையும், எங்கள் மனதையும் புரிந்து,அம்மனதிற்குள் பளிச்சென்று பிரகாசிக்கும் மத நல்லிணக்க மகுடத்தை பெற்றுக்கொள்ள தயாராகுங்கள்!
இமயமலையை இரு கரங்களால் தூக்கும் வல்லமை படைத்தவன், "எத்தனாக" இருப்பானேயானால்,அவன் வல்லமை எல்லாம் வீணாகி ஒருநாள் இடுப்பொடிந்து இல்லாமல் போய்விடுவான் என்பது இவ்உலகத்தில் நடந்து வரும் ச்ம்பவ எதிரொலியின் எதார்த்தம்!,
இந்த நாட்டில் அரசியல் நிர்வாகம் முதல் மட்டைப்பந்து விளையாட்டு நிர்வாகம் வரையும் உள்ள ஒழுங்கீனங்களின் உண்மை ஒரு நாளில் வெளிய வந்தே தீரும் என்பதை இன்றுவரை வருகின்ற செய்திகள் சித்தரிக்கின்றன!
அந்த ஒருநாள் உண்மைக்காக உங்கள் நிர்வாகம் காத்திராமல் கண்ணியமுடன் மக்கள்நலனுக்காகவும் ,
நாளைக்கும் நற்ப்பெயர் நிலைப்பெற்றிட வேண்டும்
என்ற எண்ணத்திலும் உடனே உரிய நடவடிக்கை எடுத்து ,நீங்களும்,நாங்களும் நிம்மதியாக வாழ
இந்த நிர்வாகம் வழி வகுக்கும் என்று நம்புவோமாக!
மேலே சொன்ன என் கருத்துக்கள் நோட்டீசாக போட தகுதியுள்ளது தானா? ஒரு வேளை
தகுதியுள்ளது என்றால், ஊர் நலன் கருதி யாராவது இதை பிரசுரமாக்கி வினியோகிக்க முன் வந்தால் அதற்குறிய செலவுகள் அனைத்தையும் உடனே அனுப்பி வைக்க தயாராக உள்ளேன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross