காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மூலம் நகரில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் தொடர் மாசு குறித்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA தொடராக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதியன்று, சென்னை கிண்டியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் - KEPA ஒருங்கிணைப்பில், சென்னைவாழ் காயலர்கள் சுமார் 300 பேர் திரண்டு சென்று, மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவரை நேரடியாக சந்தித்து, காயல்பட்டினத்தில் மாசு ஏற்படுத்தி வரும் DCW தொழிற்சாலை குறித்து, சுதந்திரமான வல்லுநர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்யுமாறு முறையிட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, 22.12.2012 சனிக்கிழமையன்று, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சென்னை தலைமை அலுவலகத்திலிருந்தும், தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்திலிருந்தும் அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக்குழு காயல்பட்டினம் வருகை தந்து, தொழிற்சாலையின் கழிவுநீர் ஓடை உள்ளிட்ட பல பகுதிகளையும் ஆய்வு செய்து, சோதனைக்காக பொருட்களையும் சேகரித்துச் சென்றனர்.
தற்போது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவருக்கு அக்குழு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் KEPA அந்த அறிக்கையின் நகல்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
அந்த குழுவின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கை, மண் மற்றும் நீர் பரிசோதனை முடிவுகள் - DCW தொழிற்சாலையினால் மாசு ஏற்படுகிறது என்பதை உறுதி செய்துள்ளது.
ஆய்வறிக்கை ...
மண் பரிசோதனை முடிவுகள் ...
நீர் பரிசோதனை முடிவுகள் ...
தகவல்:
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு
|