காயல்பட்டினம் நகராட்சி பொன்விழா ஆண்டு நகர்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 2012-13 ம் ஆண்டிற்கான மானிய தொகையில் 14 நபர்கள் பயன்பெற தகுதியானவர்கள். இதில் 5 பேர் ஏற்கனவே பயிற்சி
முடித்துள்ளனர். மீதியுள்ள 9 நபர்கள் தேர்வு தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கான உத்தரவு காயல்பட்டினம் நகராட்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மே 28 - செவ்வாய் அன்று வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள், சமூக ஒருங்கிணைப்பாளர் விஜய்குமார், பயனாளிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
பயனாளிகள் விபரம் வருமாறு:
1. உஷாந்தினி, 30 சி, கோமான் புதூர்
2. செல்வகுமார், 115ஐ, விசாலசியம்மன் கோவில் தெரு
3. கார்த்திகன், 171 ஏ, வண்டிமலைச்சியம்மன் கோவில் தெரு
4. பொன் ஸ்ரீமதி, 1 பி, மலைசியம்மன் கோவில் தெரு
5. அமராவதி, 130 ரரத்தினாபுரி
6. நிலோ பாத்திமா, 25 சி, சிங்கித்துறை (கற்புடையார் பள்ளி வட்டம்) வடக்கு காலனி
7. சீதா மகேஸ்வரி, 28/29 பி, வணியக்குடி தெரு
8. மேரிஸ்டன், சிங்கித்துறை
9. சிராஜுதீன், 19/2 உச்சிமாகாளியம்மன் கோவில் தெரு
இவர்களுக்கான பயிற்சி திருச்செந்தூர் CSC நிறுவனத்தில் வழங்கப்படும்.
தகவல்:
ஐ.ஆபிதா சேக்,
தலைவர், காயல்பட்டினம் நகராட்சி.
|