விளையாட்டுத் துறையில் காயலர்களை ஒருங்கிணைக்கும் நோக்குடன் இயங்கி வரும் வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பாக, காயல்பட்டினம் நகரின் விளையாட்டு ஆர்வலர்களின் நல்லாதரவோடும், காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.), ஐக்கிய விளையாட்டு சங்கம் (யு.எஸ்.ஸி.) ஆகியவற்றின் ஒத்துழைப்புகளோடும், காயல் ப்ரீமியர் லீக் கால்பந்து மற்றும் க்ரிக்கெட் போட்டிகள் கடந்த 3 ஆண்டு காலமாக நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாண்டு, வி-யுனைட்டெட் கே.பி.எல். க்ரிக்கெட் சுற்றுப்போட்டிகள், இம்மாதம் 22ஆம் தேதி புதன்கிழமை (நாளை) துவங்கி, இம்மாதம் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை, காயல்பட்டினம் கே.எஸ்.ஸி. மைதானத்தில் நடைபெறுகிறது.
மே 28ஆம் தேதியன்று நடைபெற்ற போட்டிகள் குறித்து, வி-யுனைட்டெட் கே.பி.எல். சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
V-United KPL கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், மே 29 புதன்கிழமையன்று (நேற்று) நடைபெற்ற போட்டிகள் விபரம்:-
முதல் போட்டியில் Fire Strikers அணியும், Wavoo Warriors அணியும் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த Fire Strikers அணியினர் 10 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 85 ரன்களை அடித்தனர். அந்த அணிக்காக லத்தீஃப் 23 ரன்களையும், சாலிஹ் 27 ரன்களையும் சேர்த்தனர். Wavoo Warriors அணிக்காக வாவு சாஹூல் ஹமீது, அப்துல்லாஹ் மற்றும் வாவு இப்றாஹீம் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
தொடர்ந்து பேட்டிங் செய்த Wavoo Warriors அணியினர் 9.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை அடித்து வெற்றிபெற்றனர். அந்த அணிக்காக மாலிக் 34 ரன்களையும், ஷேக் 30 ரன்களையும் சேர்த்தனர். Fire Strikers அணிக்காக யூசுஃப் மற்றும் ஹூஸைன் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இரண்டாவது போட்டியில் Greenish County அணியினரும், Final Challangers அணியினரும் விளையாடினார்கள். முதலில் பேட்டிங் செய்த Greenish County அணியினர் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்களை அடித்தனர். அந்த அணிக்காக சாஹூல் 38 ரன்களையும், சுலைமான் 23 ரன்களையும் அடித்தனர். Final Challangers அணிக்காக புஹாரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் பேட்டிங் செய்த Final Challangers அணியினர் 6.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 91 ரன்களை அடித்து வெற்றிபெற்றனர். அந்த அணிக்காக பசீர் 62 ரன்களையும், மீரா சாஹிப் 24 ரன்களையும் அடித்தனர்.
மூன்றாவது போட்டியில் Fi-Sky Boys அணியும், Kayal United அணியும் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த Fi-Sky Boys அணியினர் 10 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்களை சேர்த்தனர். அந்த அணிக்காக அபு 43 ரன்களையும், யாஸர் 40 ரன்களையும் அடித்தனர். Kayal United அணிக்காக முஹம்மது முஹைதீன் மற்றும் செய்யது அலி தலா ஒரு விக்கெட்டையும், இஜ்ஜத்தீன் 3 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து பேட்டிங் செய்த Kayal United அணியினர் 10 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களை மட்டுமே அடித்து தோல்வியடைந்தனர். அந்த அணிக்காக இஜாஸ் 29 ரன்களையும், சாமு 15 ரன்களையும் அடித்தனர். Fi-Sky Boys அணிக்காக அபு 2 விக்கெட்டுகளையும், பிலால், அபூபக்கர் மற்றும் ஃபைஸல் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
நான்காவது போட்டியில் Gallery Birds அணியும், Kayal Rockers அணியும் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த Gallery Birds அணியினர் 10 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்களை அடித்தார்கள். அந்த அணிக்காக முஹம்மது தம்பி 16 ரன்களை சேர்த்தார். Kayal Rockers அணிக்காக அம்மார், அஸார், உமர் மற்றும் இஸ்மாயில் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
பின்னர் பேட்டிங் செய்த Kayal Rockers அணியினர் 6.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 60 எடுத்து வெற்றி பெற்றனர். அந்த அணிக்காக இம்ரான் 13 ரன்களையும், உமர் 34 ரன்களையும் சேர்த்தனர். Gallery Birds அணிக்காக தவ்ஃபீக் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
நாளை (30/05) காலை நடைபெற உள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் Fi-Sky Boys அணியினரும், Kayal United அணியினரும் விளையாட உள்ளார்கள்.
இரண்டாவது அரையிறுதியில் Greenish County அணியினரும், Kayal Rockers அணியினரும் விளையாட உள்ளானர்.
இதுவரை நடைபெற்ற போட்டிகளின் மொத்த முடிவுகள் விபரப் பட்டியல் வருமாறு:-
இவ்வாறு, சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.ஜஹாங்கீர்
மே 28ஆம் தேதி நடைபெற்ற போட்டிகள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |