பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை (மே 31) 9.15 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் ஜூன் 20-ஆம் தேதி வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெற்றது. 10.70 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம் மற்றும் ஆண்டைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.
www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn. nic.in, www.dge3.tn.nic.in ஆகியவற்றில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இதில் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்3.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் ஜி.பி.ஆர்.எஸ். இணையதள வசதி உள்ள செல்போன்களிலும் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம்.
எஸ்.எம்.எஸ். மூலமாகவும் அறியலாம்: பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை எஸ்.எம்.எஸ். மூலமாகவும் அறிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. TNBOARD space Registration No,DOB in DDMMYYYY என்று டைப் செய்து 09282232585 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகளை அறிய வெள்ளிக்கிழமை காலை 9.15-க்குப் பிறகுதான் எஸ்.எம்.எஸ். செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவல் மையங்களிலும், மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறியலாம்.
மதிப்பெண் சான்றிதழ்: தனித்தேர்வர்கள் தங்களுக்கான மதிப்பெண் சான்றிதழை தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் ஜூன் 20-ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்.
மறுகூட்டலுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்: பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் மறுகூட்டலுக்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் முறையில் ஜூன் 7 முதல் ஜூன் 10 வரை விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆங்கிலம், மொழிப்பாடங்களுக்கு தலா ரூ.305-ம், பிற பாடங்களுக்கு ரூ.205-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
ஆன்-லைன் வழியில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்த பிறகு விண்ணப்ப எண்ணுடன்கூடிய ஒப்புகைச் சீட்டு, வங்கி செலுத்தும் சீட்டு (சலான்) ஆகியவற்றைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
பதிவிறக்கம் செய்த சலானைக் கொண்டு அருகிலுள்ள கோர் பேங்கிங் வசதியுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை - 6 என்ற பெயரில் பணத்தைச் செலுத்த வேண்டும்.
தகவல்:
தினமணி
|