DCW தொழிற்சாலை குறித்து காயல்பட்டினம் நகராட்சி தீர்மானம் ஒன்றினை டிசம்பர் 31, 2012 அன்று நடந்த கூட்டத்தில் நிறைவேற்றியது.
அதன்படி - மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, DCW தொழிற்சாலையில் இவ்வாரியம் ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளும் சோதனைகளின் முடிவுகளை காயல்பட்டினம் நகராட்சிக்கு அனுப்பித்தரும்படி - காயல்பட்டினம் நகராட்சி ஆணையர்
9-1-2013 தேதியிட்ட கடிதம் ஒன்று அனுப்பினார்.
ஏப்ரல் மாதம் காயல்பட்டினம் நகராட்சியில் நடந்த சாதாரண கூட்டத்தில் - நகராட்சியின் டிசம்பர் 2012 (தீர்மானம் எண் 420) தீர்மானத்தின்படி அரசு துறைகளுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு பதில்கள் கிடைக்கபெற்றது குறித்த பொருள் இடம்பெற்றிருந்தது. அப்பொருள் குறித்து விளக்கம் அளித்த நகராட்சி ஆணையர் - எவ்வித பதிலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்தோ, வேறு அரசு அமைப்புகளிடம் இருந்தோ காயல்பட்டினம் நகராட்சியால் பெறப்படவில்லை என்று தெரிவித்தார்.
அண்மையில் - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA), தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற பல ஆவணங்களில் - தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஜனவரி 28, 2013 தேதியிட்ட கடிதம் மூலம் - நகராட்சியின் டிசம்பர் 2012 தீர்மானப்படி கோரப்பட்ட தகவல்களை காயல்பட்டினம் நகராட்சிக்கு அனுப்பியுள்ள தகவலும் இடம்பெற்றுள்ளது.
தகவல்:
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு, (KEPA)
|