காயல்பட்டினம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் 24ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பட்டமளிப்பு விழா, இம்மாதம் 29, 30 (புதன், வியாழன்) நடைபெறவுள்ளது.
29ஆம் தேதி புதன்கிழமை காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை, கல்லூரி மூன்றாமாண்டு மாணவியரின் சிறப்பு நிகழ்ச்சிகளும், தீனிய்யாத் பிரிவு சிறுமியரின் பல்சுவை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
30ஆம் தேதி வியாழக்கிழமையன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை, ‘ஆலிமா ஸித்தீக்கிய்யா’ மற்றும் தீனிய்யாத் பட்டம் பெறும் மாணவியரின் சிறப்புரைகள் இடம்பெறுகின்றன.
அன்று மாலை 05.00 மணி முதல் 06.00 மணி வரை, சென்னை தாருல் ஹுதா வெளியீட்டக நிறுவனர் மவ்லவீ உமர் ஷரீஃப் முஃப்தீ காஸிமீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பட்டமளிப்புப் பேருரையாற்றுகிறார்.
அன்றிரவு 07.00 மணி முதல் 08.00 மணி வரை, கல்லூரியின் முதல்வரும் - அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீபுமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ, பட்டம் பெறும் மாணவியர்களின் பெயர்களை வாசிக்க, பெண்கள் பகுதியில், மாணவியருக்கு பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, அவரது சிறப்புரையும் இடம்பெறவுள்ளது.
இவ்விழாவில், கல்லூரியில் மூன்றாண்டு கல்வித்திட்டத்தின் கீழ் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவியருக்கு, ‘ஆலிமா ஸித்தீக்கிய்யா’ பட்டமும், கல்லூரியில் ஓராண்டு கல்வி திட்டத்தில் பயின்று தேர்ச்சி பெற்ற இல்லத்தரசிகளுக்கு சான்றிதழும், 8 வருட பாடத்திட்டத்தைக் கொண்ட தீனிய்யாத் பிரிவில் பயின்று முடித்த மாணவியருக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது.
கல்லூரி தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ நன்றி கூற, துஆ - கஃப்பாராவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுறும்.
நிகழ்ச்சிகள் அனைத்திலும், ஆண்கள் – பெண்களுக்கு தனித்தனி இடவசதி செய்யப்பட்டுள்ளதெனவும், அனைவரும் கலந்துகொள்ளுமாறும் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. |