சவூதி அரேபியா,ஜித்தா நகரில் , தஃபாரெஜ்-ஜித்தா (TAFAREG-Jeddah) அமைப்பின் குடும்ப ஒருங்கிணைப்பு மனங்கவர் பல்சுவை நிகழ்ச்சிகள் துறைமுக நகரான ஜித்தாவில் நடந்தது. அதுசமயம் ஏராளாமான தமிழகத்தின் பல்வேறு ஊர்களை சார்ந்த முஸ்லிம் சகோதரர்கள் குடும்பத்துடன் மிகஆர்வமுடன் கலந்துக்கொண்டனர்.
தஃபாரெஜ்-ஜித்தா (TAFAREG-Jeddah) அமைப்பின் பதினொன்றாவது வருட குடும்ப ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி கடந்த வியாழன் (23/05/2013) இரவு நடைபெற்றது. இந்த நல்லதோர் நிகழ்ச்சியில் ஏராளமான தமிழக முஸ்லிம்கள் குடும்ப சகிதமாய் கலந்து கொண்டனர். மஹ்ரிபுக்குப்பின் நிகழ்ச்சிகள் யாவும் இனிதே ஆரம்பமாகின.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான அறிவுத்திறன் போட்டி, ஓட்டப்பந்தயம், மியூஸிக்கள் சேர், டங் ட்விஸ்டர் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கு பிரத்தியேகமாக ஸ்கிப்பிங், அறிவுத்திறன் போட்டி, ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டன. அதுபோல் தனியாக ஆண்களுக்கு அறிவுத்திறன் போட்டி, ஓட்டப்பந்தயம், மியூஸிக்கள் சேர், வாலிபால், கயிறு இழுத்தல், டங் ட்விஸ்டர் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சியின் இடையில் நமது காயலை சார்ந்த மௌலவி. முஹம்மது நூஹ் அல்தாபி அவர்களின் சன்மார்க்க சொற்பொழிவு நடந்தது. முன்னதாக வந்திருந்த அனைவர்களுக்கும் மாலை சிற்றுண்டியாக தேநீர், ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் நிறைவில் மட்டன் பிரியாணி விருந்தளிக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தஃபாரெஜ்-ஜித்தா (TAFAREG-Jeddah)அமைப்பினர் நல்ல முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். ஜித்தாவில் வாழும் தமிழக முஸ்லிம் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் பெருந்திரளாக வந்து ஒருவொருக்கொருவர் பரஸ்பரம் சுகம்விசாரித்து குதூகலத்துடன் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்த இனியதோர் நிகழ்வில் உலக காயல் நல மன்றங்களின் கல்வி கூட்டமைப்பான , இக்ரா அமைப்பின் நடப்பு பருவ தலைவராக கடந்த 15-05-2013, புதன் அன்று பொறுப்பேற்ற ஜித்தா காயல் நற்பணிமன்றத்தின் தலைவர் ஹாஜி, குளம், எம்.எ. அஹ்மது முஹைதீன், ஜித்தா காயல் நற்பணி மன்ற ஆலோசகரும் மற்றும் ஜித்தா தமிழ் மன்றத்தின் தலைவருமாகிய ஹாஜி, எம்.எம்.மூசா சாஹிப், மன்ற செயலாளர் ஹாஜி,சட்னி எஸ்.எ.கே.செய்யது மீரான் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஹாஜி,பாளையம்,எ.ஜெ.செய்கு அப்துல்லாஹ் சாஹிப், ஹாஜி, பிரபு,எஸ்.ஜெ.நூருதீன் நெய்னா, ஹாஜி, எ.என்.அஹ்மது இஸ்மாயில் மற்றும் மன்றத்தின் உறுப்பினர்கள் ஹாஜி,எ.எ.சி.மாஹிர் அலி, ஹாஜி, சோல்ஜர், எஸ்.எ.எஸ்.முஹைதீன் இபுராஹிம் சாஹிப், ஹாஜி,கேவீ,எம்.எ.சி.ஷா மீரான் சாஹிப், ஹாஜி, சோல்ஜர், எஸ்.எ.கே. முஹம்மது ஹசன், ஹாஜி, எம்.எஸ்.எல். பஜ்லுர்ரஹ்மான், ஹாஜி, சோல்ஜர், எ.என்.செய்கு அப்துல் காதிர் ஆகியோர் குடும்பசகிதமாய் வந்தும் அனைத்து போட்டிகளிலும் ஆர்வமுடன் பங்கேற்றும் பரிசுகளையும் பெற்றதோடு அனைவரின் நல்பாராட்டுகளையும் பெற்று கொண்டார்கள்.
தஃபாரெஜ்-ஜித்தா (TAFAREG-Jeddah) அமைப்பின் தலைவரும், ஜித்தா தமிழ் சொல்வேந்தர் கழகத்தின் (Jeddah Tamil Toast Master Club) தலைவரும், எமது ஜித்தா மன்றத்தின் ஆர்வலரும் கீழக்கரை, ஹாஜி.சீனி முஹியதீன் அலி அவர்கள் தனது வாழ்த்துரையில் தஃபாரெஜ்-ஜித்தா (TAFAREG- Jeddah) அமைப்பின் அழகிய செயற்பாடுகளையும் அதற்கு நம் காயல் சொந்தங்களின் பங்களிப்பையும் பெருமிதத்தோடு கூறி இந்நிகழ்வில் காயலர்கள் குடும்பத்தோடு அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு மனப்பூர்வ நன்றியையும் தெரிவித்தார். இறுதியாக போட்டிகளில் கலந்து வெற்றிப்பெற்றவர்களுக்கு கண்கவர்பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசளிப்புக்கு பின் வந்திருந்த அனைவரும் மனமகிழ்வுடன் அவரவர் இருப்பிடம் திரும்பினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
தகவல் மற்றும் நிழல்படம்:
எம்.எம்.மூஸா சாஹிப்,
சட்னி.எஸ்.எ.கே.செய்யது மீரான்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
26.05.2013.
|