என்று நினைவாகும் நகரமன்ற வேலை - ஏங்கி தவிக்கும் படித்த பட்டதாரிகள்...! posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[31 May 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 27623
இக்கூட்டத்தில் 30 பொருட்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படவுள்ளன என்று செய்தியில் மூலம் அறிகிறேன்...
இந்த 30 பொருட்கள் அடங்கியதில் அதில் ஒன்றாவது நமது நகராட்சியில் பணியில் சேர்க்க நகரில் படித்த ஆண் - பெண் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு சம்பந்தமாக ஏதாவது ஒரு பொருள் வருமா...!
வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வேலை வரிசைப்படியும் இல்லாமல் அதன் உத்தரவுவும் இல்லாமல் ஏதோ ரோஜா குழு அமைப்பு மூலம் நகராட்சியில் ஒப்பந்த பணியாளர்கள் என்ற பெயரில் முறைகேடாக பணியில் இருப்பதாக செய்திகள் வருகின்றன...! இந்த விபரங்களை எந்த உறுப்பினர்களாவது கூட்டத்தின் பொருளில் சேர்த்து விவாதிக்கிறார்களா..?
நகருக்கும் நகர்மக்களுக்கும் சேவைகள் - நன்மைகள் செய்வேன் என்று கூறும் அணைத்து உறுப்பினர்களும் (நமது நகரின் ஆண் - பெண் பட்டதாரிகளின் நகராட்சியின் வேலைவாய்ப்பு) சம்பந்தமாக கூட்டத்தில் பேசி இருப்பார்களா...?
அங்கே கூட்டத்தில் நடப்பது என்ன..! தலைவி சரியில்லை உறுப்பினர்களுக்கு...! உறுப்பினர்கள் சரியில்லை தலைவிக்கு...!
இந்த பிரிவின் மூலம் பலருக்கு மிக சந்தோசம்... இந்த பிரிவை நல்லமுறையில் பயன்படுத்தி கொள்கிறார்கள்...! அங்கே உள்ளே ஒப்பந்த பணியாளர்கள்... ஒப்பந்த பணியாளர்கள் என்ற பெயரில் முறைகேடாக பணியில் அமர்த்தப்பட்ட நபர்கள் மிக பெரிய ஆதாயமும் - வருமானமும் அடைந்து கொள்கிறார்கள் என்பதே உண்மை..
நமது சகோதர - சகோதரிகள் பல பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியில் படித்து பட்டம்பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையாக பதிவு செய்தும் தமது நகர்மன்றத்தில் வேலை இல்லையே..! என்று மனதில் வேதனை படுகிறார்கள் குறிப்பிடத்தக்கது...
இவர்களின் வேதனையை யார் களைவது உறுப்பினர்களாகிய நீங்கள் தான் இதற்க்கு பொறுப்பு... உங்கள் குரல் ஆணையரிடம் ஒலிக்க வேண்டும்... அப்போது இவர்களின் வேதனை களையப்படும்... இன்றே இக்கூட்டத்திலேயே விவாதியுங்கள்.... நகர் மக்கள் ஆதரவுக்காக உங்கள் பின்னால் வருவார்கள்... இன்சாஹ் அல்லாஹ்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross