Re:... posted byHameed Rifai (Yanbu )[01 June 2013] IP: 69.*.*.* United States | Comment Reference Number: 27675
நல்ல முடிவை காலதாமதமாக எடுத்திருக்கிறார் உறுப்பினர் சகோதரர் லுக்மான் அவர்கள்.
சில உறுப்பினர்கள் மீது எனக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதில் முக்கியமானவர் இவர். ஆனால், காட்சிகள் வேறு மாதிரி அமைந்தன. அந்நேரத்தில் ஒன்று தலைவி போல எதற்கும் அஞ்சாமல், எந்த சென்டிமெண்ட்டுக்கும் அடிபணியாமல் துணிந்து நின்றிருக்க வேண்டும். அல்லது, இன்று எடுத்துள்ள இந்த முடிவை அன்றே எடுத்திருக்க வேண்டும்.
இந்த இரண்டில் ஒன்றைச் செய்வதை விட்டுவிட்டு, எடுத்ததற்கெல்லாம் முந்திக்கொண்டு அறிக்கை விட்டதன் விளைவாக, பல விமர்சனங்களை சந்திக்க வேண்டியதாயிற்று. மனது தூய்மையாக இருந்தால் எந்த ஒரு மனிதரையும் தவறாக எண்ணக்கூடாது என்ற அடிப்படையில், சகோதரர் லுக்மான் அவர்களின் தற்போதைய மனநிலையை நான் மதிக்கிறேன்.
காலதாமதமான முடிவுதான் இது என்றாலும், “கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” என்று சொல்லும் அளவுக்கு இல்லை.
சகோதரர் லுக்மான் அவர்கள், தூய சிந்தனைகளுடன் பொதுப்பணி மற்றும் சமுதாயப் பணிகளில், இதுநாள் வரை இருந்ததை விட வீரியமாகக் களமிறங்க வாழ்த்தி துஆ செய்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross