செய்தி: காயல்பட்டினம் நகர மக்களின் வாழ்க்கை முறை குறித்த டி.சி.டபிள்யு. துணைத்தலைவர் அறிக்கைக்கு நகர மருத்துவர் டாக்டர் கிஸார் மறுப்பறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
DCW ஸ்ரீனிவாசா எங்களை சீண்டி பார்க்காதே! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[02 June 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27710
அண்மையில் மாசுக்கட்டுபாட்டு வாரியம் DCW யிலிருந்து வரும் கழிவு நீரிலும், மண்ணிலும் மாசு இருப்பதை ஊரிஜிதம் செய்து அறிக்கை அனுப்பியது!
அதை மேற்கோள் காட்டி கடந்த வாரம் DCW நிர்வாகத்திற்கு இந்த அறிக்கையை தீவிரமாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கையை எடுங்கள் ,உங்கள் ஆலையை மூடுவது எங்கள் நோக்கமல்ல ,நம்முடைய சுற்ற சூழல் மாசுபடாமல்,நோய் கிருமிகள் தாக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதுதான் எங்களின் எதிர்பார்ப்பு!என்கின்ற மென்மையான வேண்டுகோளை விடுத்திருந்தேன்!
என்னைமட்டுமல்ல நமதூரின் நடுநிலைவாதிகளின் பெருந்தன்மையான அணுகுமுறையைக்கூட அலட்சியம் செய்து,உங்களால் ஆனதை பாருங்கள் என்ற ஆணவத்தோடு அந்த ஆலையின் துணைத்தலைவர் நமதூரையும்,நம் புனித மார்க்கத்தின் அடிப்படையில்வாழும் வாழ்க்கைமுறை கலாசாரத்தையும் கொச்சைபடுத்தும் முகமாக அறிக்கை என்ற பெயரில் அவரின் மனித நிலை தாண்டி கொப்பழித்து இருக்கிறார்!
அவருடைய குற்றசாட்டுக்களை ஏறக்குறைய அவரது
பாணி யிலேயே பதில் அளித்தால்தான் உரைக்கும்!
கேள்வி பதில்களை வரிசைபடுதுத்துகிறேன் கீழே:
கேள்வி>1 தனித்த வாழ்க்கைமுறை,2 செனட்டில் எந்த வெளிச்சமும் ,வெளிக்காற்றும் புக முடியாத அளவிற்கு நெருக்கமான வீடுகளின் அமைப்பு!>>>>>இது குற்றசாட்டு.
பதில்>>>> அப்பா! நீர் எந்த உலகத்தில் இருக்கிறீர், அருகிலுள்ள சென்னை பட்டணத்தைப் பார்க்கவில்லையா? ஒவ்வொரு வீடும் நல்ல இட வசதியோடும்,.காற்று மற்றும் சூரிய வெளிச்சதோடும் அல்லவா ஜொலிக்கிறது! உம்நெஞ்சை தொட்டு சொல்லும்,.
உம்முடைய பாணியில் அந்த நெருக்கடி குடித்தன வாழ்க்கை வாழும் அனைத்து சென்னை வாசிகளுக்கும் 90%புற்று நோய் பீடித்திருக்க வேண்டுமே ?
தமிழகத்திலேயே ஏன் இந்தியாவிலேயே ஒரு வீட்டிற்கும் அடுத்த வீட்டிற்கும் நடுவே போதுமான இடைவெளி விட்டு,சந்து அமைத்து வீடு கட்டி சகல சுகாதார காற்று வெளிச்சத்தோடு அமையும் ஒரே ஊர் எங்கள் காயல் பட்டணம் ஒன்றுதான்! இதுபோலுள்ள வேறு ஊரை இந்த அமைப்புக்களோடு காட்ட முடியுமா?
கேள்வி>> ரத்த பந்தங்களுடன் திருமண உறவு>>>>> குற்றசாட்டு
பதில்>>> உடன்பிறந்த சொந்த சகோதிரியின் மகளை மனம் முடிக்கிறீர்களே? அது ரத்த பந்தம் ரத்த உறவு இல்லையா? அந்த ரத்த உறவால் உம்முடைய கணிப்புப்படி ஆயிரகணக்கான ஏன் இலட்சக்கணக்கானவர்களுக்கு கேன்சர் நோய் வரவேண்டுமே ஏன் உமது கணிப்பு தவறுகிறது?
கேள்வி>>3 காயலர்கள் பெரும்பாலோர் வெளி நாட்டில் இருக்கிறார்கள்>>>>குற்றசாட்டு
பதில்>> நான் முதல் ஏராளமானோர் வெளி நாட்டில் தான் வாழ்கிறோம் அதனால் கேன்சர் வருகிறது என்றால், இதோ இங்கே நான் வாழும் வெளிநாட்டில் எனக்கு தெரிந்த மாற்றுமத சகோதரர்கள் சுமார் 40 முதல் 45 சதவீதம் வாழ்கிறார்கள் உம்முடைய கணிப்புபடி அவர்களுக்கும் கேன்சர் வரவேண்டுமே?>
கேள்வி>>4 திருமண விருந்து பாத்திரங்கள் சுத்தமில்லாமலும் ,உண்பதற்கு தகுதியற்ற பாதுகாப்பில்லாமல் இருக்கிறது>>>குற்றசாட்டு
பதில் >>ஒரு ஊர் என்று எடுத்துக்கொண்டால் ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் இதுபோன்ற கவனக்குறைவு ஏற்படுவது இயல்பே. இதனால்தான் கேன்சர் வருகிறது என்றால், நான் கேட்கிறேன், நீங்கள் நடத்தும் திருமண மண்டபத்திலுள்ள அனைத்து பாதிரங்களைஎல்லாம் ஆய்வு செய்வோம் அப்போது தெரியும் உங்கள் சாயல் வெளுப்பதை!
கேள்வி>> 5 காயலில் அணைத்து வீடுகளிலும் அசைவ உணவை உண்கிறார்கள் அதனால் தான் கேன்சர் வருகிறது>>>> குற்றசாட்டு.
பதில்>>அசைவ உணவால்தான் கேன்சர் வருகிறது என்று சொல்லும் நீர் எந்த விஞ்சானியிடம் சான்றிதல் பெற்றீர், உலகத்திலேயே ஒன்று அல்லது ஒன்றரை சதவீத மக்கள் மட்டும்தான் சைவ உணவை உண்கிறார்கள்.
அசைவ உணவால்தான் கேன்சர் வருகிறது என்றால் ஒவ்வொரு ஊரிலேயும் எண்ணிலடங்கா கேன்சர் மருத்துவமனை முளைத்திருக்க வேண்டுமே! சென்னை அடையாறு கேன்சர் மருத்துவமனை திருவனத்தபுரம் கேன்சர் செனட்டர் ,சென்னை தனியார் கேன்சர் செனட்டர் ஆகிய இடங்களில் பல நூற்றுக் கணக்கான சைவம் மட்டுமே உணவாக கொள்ளும் உள்,வெளி கேன்சர் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது உமக்கு தெரியுமா. (இறைவன் அவர்களுக்கு நற்சுகத்தை கொடுத்தருள வேண்டும்) நீர் விருப்பபட்டால் அங்கு கூட்டிக்கொண்டு காட்ட நான் ஏற்பாடு செய்கிறேன்!
இன்னும் பல பிதற்றல்கள்,
பெறிதாக நீட்ட விரும்பாமல் இறுதியாக ஒரு சம்பவத்தை
மட்டும் விளக்கி முடிக்கிறேன்!
கடந்த 1 1/2 வருடத்திற்கு முன்னாள்,நமதூர் சென்னை வாழ் தங்க நகை வியார வர்த்தகர் L .K S. செய்தகமது அவர்கள் நமது KEPA அமைப்பின் செயல்பாடுகளையும்,நமதூரின் பாதிப்புகளையும் தெரிந்து கொள்ள நாடி அச்சேவை செய்யும் அமைப்புகளை நேரில் வரும்படி அழைத்தார்கள் ,KEPA சார்பாக சகோதரர் ADMIN சாலிஹ் அவர்களும்,சவ்தி ஜித்தா காயல் நகர்மன்றம் சார்பாக சகோதரர் முஜாஹிதும்,KWT அமைப்பின் சார்பாக நானும் சென்று அவர்களை சந்தித்தோம்!
KEPA வின் முழுசெயல்பாட்டையும்,CD கேசட்டையும் பார்த்த செய்தகமது அவர்கள், இப் பிரச்சனையை சென்னை அடையாறு கேன்சர் செனட்டர் தலைவி டாக்டர் சாந்த தேவி அவர்களிடம் சமர்ப்பிபோம் அவர்களை சந்திக்க நான் ஏற்பாடு செய்கிறேன் நாளைக்கு அங்கு வந்து விடுங்கள் என்று கூறி சந்திக்கவும் வைத்து விட்டார்கள்!
ஆசியாவிலேயே புகழ்பெற்ற புற்றுநோய் சிகச்சை நிபுணர் பதம ஸ்ரீ சந்தா தேவி அவர்கள் நம்முடைய KEPA வின் செயல்பாட்டு விபர அறிக்கையும் படித்துவிட்டு,அத தருணத்திலேயே அங்குள்ள மற்றய மருத்துவர்களை கூப்பிட்டு உடனே இந்த ஊருக்கு செல்ல ஏற்பாட் செயுங்கள்.ஒரு மருத்துவ குழுவும் வரவேண்டும் என்று உத்தரவு விட்டார்,
அத்தனை பேர்களுக்கும் விமான செலவுகள் முதல் அனைத்து செலவுகளையும் LKS செய்தகமது அவர்களே மேற்கொண்டு டாக்டர் சந்தா தேவி அவர்களை காயலூருக்கு அழைத்தும் வந்து விட்டார்கள்!
சாந்தா தேவி நமதூருக்கு புறப்படும் பொழுது.அவர்கள் சொன்னது நம் ஊர் சுற்றுவட்டார அனைத்து மருத்துவர்களும் காயலுக்கு வரவேண்டும் என்ற கூறினார்கள்,ஆசியாவின் சிறந்த மேதை அழைக்கிராகள் என்ற அகமகிழ்வோடு அனைத்து மருத்துவர்களும் கிழக்கே குமரி மாவட்டம் முதல் மதுரை வரையுலுள்ள ஒரு மருத்துவ பட்டாளமே குமிந்தது!
டாக்டர் சாந்தா தேவி அவர்கள் அனைத்து டாக்ட்டர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் KMT மருத்துமனை திறந்த மேடை அரங்கில் நூற்றுக்கணக்கான ஆண்கள் பெண்கள் மத்தியில் விரிவாக உரையாற்றினார்கள் !
அவர்கள் உரையில் ஒரு சதவீதம் கூட நமதூரின் கலாச்சாரம் பற்றியோ,வாழ்க்கைமுறை பற்றியோ,உணவு பழக்கங்களான அசைவ மற்றும் புலால் உணவு பற்றியோ கொஞ்சம் கூட கோடிட்டு காட்டவில்லை!
மாறாக DCW ஆலையின் செயல்பாடுகளை பற்றி தீவிரமாக கண்காணித்து முடிவெடுப்பதாக கூறினார்கள்! அதோடு மட்டுமல்ல அன்று வந்த அனைத்து மருத்துவர்கள் பட்டாளத்தில் ஒரு மருத்துவர் கூட நம் ஊரின் வாழ்க்கை முறை ,உணவு பழக்கம், கலாசாரம் ஆகிய எதைப்பற்ற்யும் எள்ளளவு கூட எசகு பிசகாக கூறவில்லை!
ஆக இவ்வளவு மருத்துவ மேதை முதல் அனைத்து மருத்துவர்கள் வரை நமதூரைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாத நிலையில்,இந்த துணைத்தலைவர் மேதாவித்தனமாக மிகப்பெரிய கண்டுபிடிப்பாக கதை அளந்திருப்பதிலிருந்து அவர் கடைந்தெடுத்த காழ்ப்புணர்ச்சியின் மொத்த உருவமாகத்தான் மிளிர்கிறார், அதற்க்கு மெருகூட்ட ஒருசில எடுபிடி எட்டப்ப வாரிசுகளின் உதவியும் கிடைத்துள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross