காயல்பட்டினம் நகர மக்களின் வாழ்க்கை முறை குறித்து, காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் துணைத்தலைவர் (நிர்வாகம்) ஸ்ரீனீவாசன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பித்த அறிக்கையை, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA அண்மையில் பொதுப் பிரசுரமாகவும், இணையதளங்களில் செய்தியாகவும் வெளியிட்டிருந்தது.
அந்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து, காயல்பட்டினத்தைச் சேர்ந்த குழந்தை நல மருத்துவரும், மத்திய சுற்றுசூழல் மற்றும் வன அமைச்சகத்தின் வல்லுநர் மதிப்பீடு குழு (சுரங்கம்) உறுப்பினரும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் வல்லுநர் குழு உறுப்பினருமான டாக்டர் த.முஹம்மது கிஸார் பின்வருமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்:-
DCW துணை தலைவரின் அவதூறு அறிக்கைக்கு, மறுப்பும் கண்டனமும்!
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் DCW ஆலை துணைத்தலைவர் திரு ஸ்ரீநிவாசன் அவர்கள , தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்திடம் தமது ஆலை பற்றி சமர்பித்த அறிக்கையில் மிக அவதூறான , மத துவேஷம் கலந்த கருத்துக்களை பதிவு செய்து இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.ஆலை ஆரம்பித்து இதுநாள் வரை தாங்கள் அத்துமீறி சுற்றுப்புற சூழலை மாசுபடுத்திவந்ததை ஒரு சில கண்டன குரலோடு மட்டும் நிறுத்திகொண்ட இந்த மக்கள் திடீரென்று , உணர்வு பெற்று , மிக ஆக்ரோசமாக எதிர்ப்பதால், எங்கு தங்கள் ஆலைக்கு பாதிப்பு வந்து விடுமோ என்ற பயத்தில் சேற்றை வாரி தூவயுள்ளார்.
இதுநாள் வரை ஆலை சம்பந்தமாக நடந்த எந்த public hearing , எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் , தாங்கள் setup செய்த ஆள்களை வைத்து நடந்து வந்ததற்கு மாற்றமாக , கடந்த 2011 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த public hearingஇல் காயல்பட்டினம் சார்ந்த பொதுநல ஆர்வலர்கள் , ஆலையின் கேப்ப மாரிதனத்தை போட்டு உடைத்து காட்டியதை கண்டு பொறுக்காமல், தனது விசத்தை இப்படி கக்கி இருக்கிறார் .என்ன மாசுபடுத்தினாலும் இந்த ஊர் மக்கள் கேட்கவே மாட்டார்கள் என்ற நிலை மாறி, இன்று ஆர்பபாட்டம் கடையடைப்பு, மாநிலம் முதல் மத்திய அரசுவரை சம்பந்தப்பட்ட அலுவலர் மற்றும் அமைச்சர்களுக்கு புகார் என்று சென்றதை ஜீரணிக்க முடியாமல் இப்படி புழுதிவாரி உள்ளார்.
இந்த நிகழ்வுகளால், எங்கே தனது அடுத்த தலைமுறை வரை வாழ்வாதாரம் மற்றும் வேலை கேரன்டீ செய்தது வீணாகிவிடுமோ என்ற பயம் மற்றும் ஆதங்கத்தில் இப்படி உளறி கொட்டி உள்ளார்.
இனி அவர் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு குற்றசாட்டுக்கு மறுப்பு தருகிறேன்.
----காயல்பட்டினம் மக்களின் வாழ்க்கைமுறை மற்ற , மக்களைவிட வித்தியாசம் எனபது, பெரிய அளவில் பொதுநிலையில் இருந்து விலகி (deviation ) இருக்கவில்லை பொதுவாக தம் இடம் ,மதம் தொன்றுதொட்டு வரும் சற்று மாறுபட்ட வாழ்கையே இது.இது எல்லா சமூகம் மற்றும் ஊரிலும் உண்டு .
-----எல்லோருமே தங்கள் மதம் ,சமயம் ஜாதி சம்பநதப்பட்ட மற்றும் பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் பொருட்டே தங்கள் வாழ்வு முறையை அமைதுள்ளனர.இதற்க்கு காயல்பட்டினம் மக்கள் எந்த விதிவிலக்கும் இல்லை
-------பொதுவாக காயல்பட்டினம் மக்கள் தான் தங்கள் வீட்டை விசாலமாக மிக பெரியதாக கற்றோட்டதுடன் கட்டி வருபவர்கள். இதை மற்ற ஊர்களை ஒப்பிடும்போது கண்கூடாக பார்க்கலாம். வீட்டூக்கு முன் இடம், வீட்டில் முற்றம் , வீட்டுக்கு பின்புறம் தோட்டம் , இதுபோன்ற வசதியுடன் , ஒன்றுக்கு இரண்டு மாடி ,இதுபோக ஆரோக்கியமான காற்றுக்கு கடல்கரை , சற்று இளைப்பாற அருகில் உள்ள ஊருகளில் பண்ணை வீடுகள் என்று சராசரியாக மிக ஆரோக்கியமாகவும் , சந்தோசமாகவும் வாழ்ந்து வருபவர்கள் இந்த மக்கள் என்பதை பலரும் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள் ஆனால் அதிகம் படித்த திரு ஸ்ரீனிவாசன் , முழு பூசணிக்காயை , சோற்றில் மறைக்கும் வண்ணம் குற்றம் சாற்றி இருக்கிறார்..
இருந்தாலும் அவரின் குற்ற சற்று ஒரு வாதத்திற்காக உண்மை என்று வைத்தாலும் ,இந்த மிக நெருக்கமான சூழ்நிலையில்வாழ்வதால கேன்சர் வரும் என்று எந்த மருத்துவ நூலும் கூறவில்லை.
--- இன்றைக்கு இந்தியா போன்ற நாடுகளை எடுத்து கொண்ட மிக அதிக சதவிகித்தினர் வைட்டமின் D சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது காயல்பட்டினத்தில் மட்டும் இல்லை.. அண்மையில் சென்னை காஞ்சி காமகோட்டி child Trust மருத்துவமனையில் பணிபுரியும், சுமார் 106 குழந்தை நல மருத்துவர்களுக்கு இரத்தத்தில் vitamin D அளவு பரிசோதித்ததில் 80 சதவிகிதத்தினருக்கு மேல் வைட்டமின் d குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த அறிக்கை Indian Academy Paediatrics , chennai chapter மாதந்திர கூட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன் savera hotel , வைட்டமின் D என்ற தலைப்பில் நடந்த பொது, அந்த மருத்துவமனை superindentent Dr Balasubramaniam வெளியிட்ட அறிக்கை.
-----இரத்த சம்பந்தத்துடன் திருமணம் புரிவதால் சில genetic நோய்கள் வருவது உண்மையே என்றாலும், குற்றசாட்டும் அளவுக்கு இரத்த சம்பந்தமாக மணமுடித்தால் கேன்சர் வரும் என்று சொல்ல இயலாது காயல்பட்டினம் , மக்கள் வெறும் 2 ஆம் மற்றும் 3 ஆம் நிலை இரத்த சம்பந்தம் (2nd ,3rd டிகிரி consaginous marriage ) தான் செய்கிறார்கள் .யாரும் முதல் இரத்தம் சம்பந்தம் (1st டிகிரி consaginous marriage ) க்கு சற்று நிகரான அக்காள் மகளை யாரும் மணமுடிப்பது இல்லை.
இரத்தம் சம்பந்தமான மணத்தில் புற்று நோய் போன்ற மற்ற நோய்கள், வரும் என்றால், அதிக இரத்த சம்பந்தம் உடைய மணமான அக்காள் மகளை முடிப்பதில் வரணும்மா அல்லது 2nd , 3rd டிகிரி consaginous ஆனா மாமா மாமி சித்தப்பா பெரியப்பா மகளை முடிப்பதில் வரணுமா?
இந்த ஊரில் எல்லா குடும்பங்களிலும் உடல் ஊனமுற்ற குழந்தை பிறக்கிறது என்பது இவரின் வறட்டு வாதம்.
-----மிக நெருக்கமான திருமணத்தால் மட்டும் எப்படி வைட்டமின் குறைபாடு வரும்.. வைட்டமின் குறைப்பாடு உணவு பற்றாகுறையால் வரும்.. இந்த ஊர் மக்கள் அல்லா உதவியால் எந்த உணவு குறைபாடும் இல்லாமலே வாழ்ந்து வருகிறார்கள்.
இன்னும் சொல்லபோனால் , சுத்த சைவம் சாப்பிடுபவர்களுக்கு மட்டுமே பிரத்யோகமாக வைட்டமின் B 12 குறைப்படும், அதனை சார்ந்த megaloblastic இரத்த சோகை , SCDP என்னும் முது தண்டுவட பாதிப்பு வரும்.. இந்த ஊர் மக்களில் சுத்த சைவம் என்று ஏரையும் காட்ட முடியுமா ..கண் கண்ணாடி அணிபவர்கள் எல்லா ஊரில் தான் இருக்கிறார்கள்.கண் கண்ணாடி அணிபதர்க்கு பல பல காரணங்களா உள்ளன ...இன்னும் இந்த ஊர் மக்கள் அசைவம் சாப்பிடுவதால் கண்ணுக்கு செல்லும் optic nerve மேலும் பலம் பெற்றும் நல்ல பார்வையே தரும்.
----- இந்த ஊர் மக்கள் வெளிநாடு களுக்கு சென்று பிழைக்க காரணம் இந்த மக்களுக்கு வரவேண்டிய நியாயமான வேலை வாய்ப்பை , இவர்கள் போன்றோர் பறித்ததநிலை..வெளிநாட்டில் சென்று யாரும் ac இல் உட்கார்ந்து வேலை செய்யவில்லை .மிக கடினமாக உழைக்கிறார்கள் ஊரில் வந்தது மனைவியருடன் மிக சந்தோசமாக இருக்கிறார்கள்.. இதைவிட உடற்பயிச்சி எதுவும் பெரிதாக இல்லை.
-----உணவு சமைக்கும் பாத்திரத்தில் அலுமினியம் முலாம் பூசம் வழக்கம் பெரிய சமையல் கலை வல்லுனரிடம் உள்ளது அது இங்கு மட்டும் இல்லை..எல்லா ஊரிலும் தான் பெரிய சமையல் பத்திரங்களில் அலுமினியாம் பூசுகிறார்கள் .இவர் சொல்வது போல் கிலோ கணக்கில் யாரும் அலுமினியும் பூசுவது இல்லை. அதை பூசும் வல்லுனருக்கு எந்த பாத்திரத்திற்கு எவ்வளவு அலுமினியம் பூச வேண்டும் என்பது திரு ஸ்ரீனிவாசன் விட நன்கு தெரியும்.
----இந்த எண்ணை , நெய் பயன்படுத்தும் விசயத்தில் இந்த ஊர் மக்கள் மற்ற வர்களை விட பெரிய வித்தியாசமில்லை .இன்னும் சொல்ல போனால் சில சமுதாய மக்கள் மாமிசம் சாப்பிடாமல் மிக அதிக அளவில் நெய் , மற்று டால்டா பயன்படுத்க்கிரார்கள் ...இந்த ஊர் மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது இவர் குறிப்பிடுவதை போல் யாரும் அதிக அளவில் dalda பயன்படுத்துவது இல்லை.இந்த ஊரில் , தாய் மண்ணில் பிறந்த சுமார் 118 மருத்துவர்கள் இருந்து, மக்களுக்கு எந்த மாதிரி உணவு உட்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கி வருகிறார்கள்..
----அசைவம் உண்பவர்களுக்கு என்று பிரயோக நோய்கள் இருந்தாலும், அதை வென்று எடுக்க இந்த மக்களுக்கு தெரியாமல் இல்லை.. அசைவதுடன் நல்ல ஆரோகியமான நடைபயிற்சி சந்தோசமான மனநிலை மற்ற பழம் போன்ற உணவுகளுடன் ,அசைவம் அதிகம் சாப்பிட்டால் வரும் பிரச்சினையை வென்று எடுக்க இந்த மக்களுக்கு தெரியாமல் இல்லை.
அசைவம் போன்ற மாட்டு இறைச்சி பன்றி இறைச்சி சாப்பிடுவதால் மட்டுமே வரும் cysticercosis என்னும் நோய் சுத்த சைவ உணவை சாப்பிடும் டென்னிஸ் வீரர் leander paes க்கு எப்படி வந்தது.. அசைவம் சாப்பிடாமல் வெறும் சைவம் சாபிடுபவர்களுக்கு என்று வரும் பிரத்யேக நோய்களும் உண்டு ..ஆக எல்லா உணவு முறைகளிலும் அதற்கென பிரத்யோக நோய்கள் உள்ளன. அது அவர்களின் மரபு சுற்றுசூழலை பொறுத்து வெளிப்படும் அல்லது மறையும்.
----சில்வர் கவர் செய்யப்பட்ட இனிப்பு வ்காகைகள் இந்த ஊரைவிட மற்ற ஊர் இனிப்பு கடைகளில் தன அதிகம் பார்க்கலாம்..
---செல்போன் டவர் இல்லாத ஊர் எங்கே இருக்கிறது.. நகர்ப்புறங்களில் தெருவுக்கு 4 செல்போன் டவர் உள்ளது.இதை எல்லாம் ஒரு காரணம் என்று கூறினால் கேட்கிறவன் காதில் கேப்பை வடிகிறது என்று நினைத்து கொண்டாரா
----மாத்திரை பயன்பாடு இந்த ஊரில் அதிகம் உள்ளதற்கு காரணம் உங்கள் ஆலையின் சுற்றுப்புற சூழல் மாசுபாடதே காரணம்.. இவர்கள் விடும் நச்சு புகையால் கேன்சர் போன்ற நோய்கள் வரவில்லையாம்.ஆனால் நோய்க்கு எடுக்கப்படும் மாத்திரையால் கேன்சர் வரும் என்று இவர் கூறுவதை ஏற்ற்றுகொள்ள TNPCB அதிகாரிகள் ஒன்றும் LKG படித்து விட்டு அந்த இடத்திற்கு வரவில்லை..
---'நாங்கள் பலவருடங்களாக இங்கு பணியாற்றி இந்த தொழிற்சாலை குடியிருப்பில் தான் வாழ்கிறோம். பணிஓய்வுக்கு பின்னும் இங்குதான் இருக்கிறோம். அப்படி ஒருசமயம் தொழிற்சாலை மூலம் பாதிப்புஏற்பட்டால், அது முதலில் எங்களை பாதித்துவிட்டுத்தான், காயல்பட்டினம் மக்களை பாதிக்கவேண்டும். நாங்கள் மிக ஆரோக்கியத்துடன் இருக்கிறோம். 'இது DCW தொழிற்சாலையில் பணியாற்றி ஒய்வுபெற்ற முன்னாள்பணியாளர்கள் கூறுவதாகும். மேலோட்டமாக பார்த்தால் இது சரியாக தோன்றினாலும், இது நிதர்சனமான உண்மை அல்ல.
ஒரு தொழிற்சாலையில் விபத்தோ அல்லது சுகாதாரப்பாதிப்போ ஏற்பட்டால், அந்த தொழிற்சாலைகக்குள் அல்லது அதனை ஒட்டிவாழும் மக்களை விட, அதனைச்சுற்றி, சற்று தொலைவில் உள்ள ஊர் மக்களைதான் பாதிக்கும்.
இதை போபால் விஷவாயு பாதிப்பில் நம்கண்கூடாக பார்த்தோம். அங்கு union carbide ஆலையில் இருந்த எவரும் methyl isocyanaide வாயுவால் பாதிக்கப்படவில்லை. அதைசுற்றி இருந்த ஏரியாமக்கள்தான் பாதிக்கபட்டர்கள் எனபது உண்மை.. எனவே இந்தவாதமும் அடிபட்டு போகிறது.
---குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, எந்த புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகளுக்கு ஆட்படாமல், எந்த புற்றுநோய்க்கான அதிக ஆபத்து என்ற Risk Factor இல்லாமல் இருந்தும், அவர்களை புற்றுநோய் அதிக அளவில், வீரியத்துடன் தாக்கி வருகிறதை பார்க்கிறோம்.
இதற்கு என்ன காரணம் இருக்கும் எனபல அமைப்புகளும் ஆராய்ந்ததில், அனைவரின் கைகளும் அருகில் உள்ள DCW தொழிற்சாலையை நோக்கித்தான் நீளுகிறது.
இதை நம் ஏதோ சந்தடி சாக்கில் கூறவில்லை.இந்த தொழிற்சாலையை புற்றுநோய் ஏற்படக்காரணம் என்று, உறுதியிட்டு கூற முடியாவிட்டாலும், சூழ்நிலை சான்றுகள் (circumstantial evidence) மற்றும் corrobarative evidence எனப்படும் நிலையில், நாம் அந்த தொழிற்சாலையை சந்தேகிக்க ஒரு வாய்ப்பு உள்ளது.
காயல்பட்டினத்தில் அதிகம் cancer ஏற்படுத்தும் gene என்னும் oncogene இருப்பதாக அதிகம் அறியப்படவில்லை. ஏனென்றால், இந்த oncogene இப்போதைக்கு எந்த பரிசோதனைமூலம் நிரூபிக்க முடியாவிட்டாலும், இந்த oncogene மூலம் ஏற்படும் கேன்சர் அதிகம் ஒரேகுடும்பத்தை சேர்ந்த இரத்த பந்தங்களையும், பரம்பரையையும் பாதிக்கும்.
---நாம் அறிந்த வரை காயல்படினத்தில் உள்ள, அதிகமான கேன்சர், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களையோ அல்லது பரம்பரையிலோ வரவில்லை என்றே தெரிகிறது. இதனால் மரபியல் காரணமாக இங்கு அதிகம் கேன்சர் காணபடுகிறது என்றவாதம் அடிபட்டுபோகிறது.
இந்த ஊரிலோ அல்லது சுற்றுபுறத்திலோ, carcinogen என்னும் cancer உண்டு பண்ணும் காரணிகளை முக்கியபொருளாகவோ அல்லது கடைநிலைபொருளாகவோ கையாளும் தொழிற்சாலை DCW தவிர வேறு இல்லை.
இந்த ஊரில் ஏற்பட்டுள்ள cancer களில்அதிகம் , நுண்கிருமிகளால் ஏற்படும் cancer அல்ல. அதனால் கிருமிதாக்கத்தினால் கேன்சர் ஏற்படுகிறது என்றவாதமும் நிற்கவில்லை. கிருமியினால் வரும் கான்செர்அனேகமாக கல்லீரல்புற்று மற்றும் கருப்பை வாய்புற்று மட்டுமே. இரண்டுமே இங்கு மிகமிகக் குறைவு.
இந்த ஊரில் உள்ள அசைவஉணவு உள்ளிட்ட உணவுபழக்கம் தான் அதிககேன்சர் வரகாரணம் என்றும்கூற முடியாது. இதை எந்த மருத்துவ ஆய்வும் உறுதிப்படுத்தவில்லை. இது ஒரு காரணமாக இருந்தால், அதிக கேன்சர் எண்ணிக்கை அரபு நாடுகளில்தான் இருக்கவேண்டும்.
ஊரை சுற்றியோ, சிலபல கிலோமீட்டர் தூரம் வரை, நாம் அறிந்த வரை புற்றுநோயை உண்டு பண்ணும் கதிரியக்கம் expose ஆனதாக சரித்திரம் இல்லை.
இதை வைத்துபார்க்கும் போது DCW தான் இந்தநோய்க்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்க தோன்றுகிறது. காரணம், அதுகையாளும் பொருள்களில் சில carcinogen என்னும் cancer உண்டுபண்ணும் காரணிகள் வகையைசார்ந்தது. இந்ததொழிற்சாலை, பலமுறை அரசுவிதி முறைகளை மீறி காற்றிலும், கடலிலும் தனது இரசாயனகழிவுகளை வெளியேற்றியதை ஆதராத்துடன் நாம் பார்த்திருக்கிறோம்.
இதை வைத்து ஒரு circumstantial evidence மற்றும் corroborative evidence ஆகவைத்து, நாம் இந்தகுற்றச்சாட்டை அந்த தொழிற்சாலை மீது வைக்கிறோம்.
பொதுவாக ஒரு தொழிற்சாலை மீது சுற்றியுள்ள மக்களுக்கு அந்த தொழிற்சாலை மீது சுகாதாரரீதியாக அச்சம் ஏற்பட்டால், அந்த அச்சத்தை போக்கும்வரை, தனது உற்பத்தியை நிறுத்திவைப்பது அல்லது மேலும் விரிவாக்கபணிகளுக்கு செல்லாமல் இருப்பது அல்லது முழுவதுமாக அந்த அச்சத்தை போக்குவது அந்த தொழிற்சாலையின் தார்மீக கடமை.
ஆனால் இதில் எதையும் DCW செய்யவில்லை. மாறாக வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், மேலும் கடலில் அவ்வப்போது, தனது அமிலக் கழிவைத் திறந்துவிட்டு, நமது அச்சத்தை மேலும் அதிகமாக்கியே வைத்துள்ளது.
இவ்வாறு, அந்த அறிக்கையில், டாக்டர் த.முஹம்மது கிஸார் தெரிவித்துள்ளார். |