தமிழக மக்களுக்கு, மிகக் குறைந்த விலையில் உணவுப் பொருட்களை வழங்கும் நோக்குடன், “அம்மா உணவகம்” என்ற பெயரில் தமிழகமெங்கும் உணவகங்கள் அமைக்கப்படும் என அண்மையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதனடிப்படையில் தமிழகத்தின் பெருநகரங்களில் துவக்கமாக அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 10 இடங்களில் அம்மா உணவகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில், தூத்துக்குடி சவேரியார்புரத்தில் தற்போது அம்மா உணவகம் அமைக்கப்பட்டு, சேவைக்கு ஆயத்தமாக உள்ளது.
இந்த உணவகத்தில், இன்று (ஜூன் 01) காலையில் உணவு விற்பனை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. காலை சுமார் 11.30 மணியளவில் அவ்வழியே பயணித்துச் சென்ற காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் மற்றும் குழுவினர், அம்மா உணவகத்தைப் பார்த்துவிட்டு வந்தனர்.
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதியிலும் இதுபோன்று “அம்மா உணவகம்” அமையப்பெற தேவையான முயற்சிகளை மேற்கொள்ள நகர்மன்றத் தலைவர் ஆவல் தெரிவித்தார்.
[செய்தி திருத்தப்பட்டது @ 08:14 / 02.06.2013] |