காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள் உள்ளிட்ட 8 உறுப்பினர்கள், அதிமுக கட்சியில் இணைந்த செய்தி - கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதியன்று ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.
அதற்கடுத்த சில நாட்களில், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து நகரெங்கும் ஒட்டப்பட்ட சுவரொட்டியில், 03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள் பெயர் இடம்பெறவில்லை.
இந்நிலையில், ஏப்ரல் 29 அன்று நடந்த நகர்மன்ற கூட்டத்தில் தான் அ.இ.அ.தி.மு.க.வில் இணையவில்லை என்றும், மரியாதை நிமித்தமாகவே அமைச்சர் சி.த. செல்லாபாண்டியனை தான் சந்திக்க சென்றதாகவும் 3 வது வார்டு உறுப்பினர் சாரா உம்மாள் தெரிவித்தார்.
அதன்பிறகு, கடந்த மே மாதம் 18ஆம் தேதி சனிக்கிழமையன்று, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், நகர அதிமுக சார்பில் நடத்தப்பட்ட - தமிழக அரசின் ஈராண்டு சாதனைகள் விளக்கப் பொதுக்கூட்டத்திற்காக வெளியிடப்பட்ட பிரசுரத்தில் நகர்மன்ற உறுப்பினர் சாரா உம்மாள் பெயர் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், இம்மாதம் 03ஆம் தேதியன்று - திமுக தலைவர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள், அவரது கணவர் வி.எஸ்.எல்.அப்துல்லாஹ் ஸாஹிப் ஆகியோர் இணைந்து சுவரொட்டி வெளியிட்டுள்ளனர். இச்சுவரொட்டி நகர சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளது.
படம்:
சாளை நவாஸ்
[கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டன @ 13:28 / 02.06.2013]
|