தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவியருக்கு, அவர்களின் கோடை விடுமுறையை முன்னிட்டு, காயல்பட்டினம் அலியார் தெருவிலுள்ள மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில், கடந்த மே மாதத்தில் கோடைகால பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
மார்க்கக் கல்வி (தீனிய்யாத்) பாடங்கள் இம்முகாமில் மாணவ-மாணவியருக்கு நடத்தப்பட்டது. 15 நாட்கள் கால அளவு கொண்ட இம்முகாமில் கலந்துகொண்ட மாணவ-மாணவியருக்கு, மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியின் கத்தீப் மவ்லவீ அப்துல் மஜீத உமரீ அறிவுரை வழங்கினார்.
முகாம் நிறைவில், மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தகவல்:
S.ஷம்சுத்தீன்
தலைவர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை |