தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவ-மாணவியருக்கு வழங்குவதற்காக இலவச பாடநூற்கள், பாடக் குறிப்பேடுகள், சீருடைகள் ஆயத்த நிலையிலுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 80 அரசு பள்ளி மற்றும் 135 அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆக மொத்தம் 215 பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு இலவசமாக பாடநூல், நோட்டுகள், சீருடைகள் வழங்கி வருகின்றது.
இந்த கல்வியாண்டிற்கு (தமிழ், ஆங்கிலம் வழி)
06ஆம் வகுப்பில் பயிலும் 24100 மாணவ- மாணவியருக்கும்,
07ஆம் வகுப்பில் பயிலும் 24300 மாணவ-மாணவியருக்கும்,
08ஆம் வகுப்பில் பயிலும் 26500 மாணவ-மாணவியருக்கும்,
09ஆம் வகுப்பில் பயிலும் 26600 மாணவ-மாணவியருக்கும்,
10ஆம் வகுப்பில் பயிலும் 21800 மாணவ-மாணவியருக்கும்,
தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல், கணிதம், ஓவிய நோட், கணித வரைபடம், கணித செய்முறை, செய்முறை பயிற்சி ஏடு, கட்டுரை நோட், 2 கோடு நோட் ஆகிய பாடநூல் 12,33,800 வரப்பட்டு, அனைத்து அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
11ஆம் வகுப்பு பயிலும் 19330 மாணவ-மாணவியருக்கும்,
12ஆம் வகுப்பு பயிலும் 17900 மாணவ-மாணவியருக்கும்
தமிழ் மற்றும் ஆங்கிலம் தொழிற்கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கும்
தேவையான அனைத்து பாடநூல்களும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சத்துணவு சாப்பிடும் 06ம் வகுப்பு முதல் 08ஆம் வகுப்பு வரை பயிலும் 22883 மாணவ-மாணவியருக்குத் தேவையான முதல் செட் சீருடைகள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்தவுடன் அனைத்து மாணவ-மாணவியருக்கும் இலவச பாடநூல், நோட்டுகள், சீருடைகள் வழங்கப்படும்.
மேலும் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009இன் அடிப்படையில், 25 சதவீத இடஒதுக்கீட்டின் படி மாணவர்களின் சேர்க்கைப் படிவம் இதுவரை 25 மாணவர்களின் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |